
பகலில் மட்டுமே நாம் பார்க்கக்கூடிய பெரிய நட்சத்திரம் ஒன்று இருக்கிறது. கண்ணால் பார்க்க முடிகிற மிகப் பெரிய நட்சத்திரம்!
ஆம், சூரியன் ஒரு நட்சத்திரம்தான்.
காற்றடைக்கப்பட்ட ஒரு பந்து போன்றது சூரியப் பந்து. உள்ளே ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது.
சூரியனையும் அதைச் சுற்றியுள்ள கோள்கள் அமைப்பையும் சூரிய மண்டலம் (சோலார் சிஸ்டம் -/ Solar Systerm) என்கிறோம்.
சூரிய மண்டலத்தில் எட்டு பெரிய கோள்கள் உள்ளன. புளூட்டோ என்ற சிறிய கோளும் உள்ளது. இதுதவிர 168 துணைக்கோள்கள், மூன்று குறுங்கோள்கள் உள்ளன. குறுங்கோள்களுக்கு நான்கு துணைக்கோள்களும் உண்டு. எரி கற்கள், விண்கற்கள் போன்றவையும் சூரிய மண்டலத்தில் அடக்கம்.
சூரியன் தோன்றி 4.6 பில்லியன் வருடங்களாகிறது. (ஒரு பில்லியன் = 100 கோடி.)
சூரியனுக்குள் நிரம்பியுள்ள ஹைட்ரஜன் வாயு அதன் உள்ளே அணுக்கரு இணைவை (நியூக்ளியர் ஃபியூஷன்/Nuclear Fusion) ஏற்படுத்துவதன் மூலம் வெப்பமும் வெளிச்சமும் உண்டாகிறது. அணுக்கரு இணைவு நடப்பதால் ஒரு நொடிக்கு நான்கு மில்லியன் அளவு சூரிய சக்தி சூரியனில் உருவாகிறது.
சூரியனில் 74% ஹைட்ரஜன் வாயுவும், 25% ஹீலியம் வாயுவும் உள்ளது. மீதமுள்ள ஒரு சதவிகிதம், ஆக்சிஜன், கார்பன், யுரேனியம், காரீயம் ஆகியவை.
மற்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியன் தன்னைத்தானே சுற்றி வருகிறது.
சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
மற்ற கோள்கள் ஒழுங்கான அமைப்பில் சுற்றி வருவதற்கு சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம்.
பூமியிலிருந்து பார்க்கும்போது நம் கண்களுக்கு சூரியன் மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. விண்வெளியிலிருந்து பார்த்தால் சூரியன் வெண்ணிறத்தில்தான் ஒளிரும்.
பூமி, உயிரினங்கள் வாழத் தகுதியானதாக இருப்பதற்கு சூரியனே காரணம். சூரியன் இல்லாவிட்டால் நாம் பூமியில் உயிர்வாழ முடியாது. எனவே நமக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் சூரியன்தான்!
இதைப் பற்றிய தகவல்களைப் பார்க்க. www.kickstarter.com/projects/1243275397/air--umbrella