sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சூப்பர்மேன் நினைவுப் படிகம்!

சூப்பர்மேன் நினைவுப் படிகம்!

சூப்பர்மேன் நினைவுப் படிகம்!


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மெசபடோமியாவில் களி மண்ணில் எழுத ஆரம்பித்தான் மனிதன். பிறகு, பனை ஓலை, பேப்பர் என்று எழுத ஆரம்பித்தோம். நவீன காலத்தில், விஷயங்களைச் சேமித்து வைக்க 1.44 மெகாபைட் (Megabyte) கொள்திறன் கொண்ட நெகிழ்வட்டு (ஃபிளாப்பி டிஸ்க் - Floppy Disc), குறுவட்டு (காம்பாக்ட் டிஸ்க் - Compact Disc) என்று பயன்படுத்தினோம்.

இப்போது, தரவுகள் சேமிப்பில் ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. 360 'டெராபைட்' (Terabyte) திறன் கொண்ட நிறைப் படிகத்தை (மெமரி கிரிஸ்டல் - Memory Crystal) உருவாக்கி இருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் இங்கிலாந்தின் சௌத் ஹாம்ப்டன் (South Hampton) பல்கலைக்கழகத்தின் ஒளி மின்னணுவியல் ஆராய்ச்சி மைய (Optoelectronics Research Centre) விஞ்ஞானிகள்.

இந்த படிகத்தின் நினைவுத் திறன் ஒரு பில்லியன் ஆண்டுகள் (100 கோடி) ஆனாலும் அழியாது. டிஜிட்டல் தரவு சேமிப்பில் (டிஜிட்டல் டேட்டா ஸ்டோரேஜ் - Digital Data Storage) இது ஒரு புதிய சகாப்தம். இந்த சேமிப்பகம் 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் தாங்கக்கூடியது. அறை வெப்பநிலையில் 13.8 பில்லியன் ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும்.

இந்தப் படிகத்தில் உள்ள தரவுகளை நெகிழ்வட்டுக்குள் சேமிக்க வேண்டுமானால், கிட்டத்தட்ட 25 கோடி நெகிழ்வட்டுக்கள் தேவையாம். பிரமிப்பாக இருக்கிறதுதானே! இப்படி சூப்பர்மேன் போல, தகவல்கள் அனைத்தையும் தாங்கி நம்முடைய நினைவகமாக என்றென்றும் இருக்கப்போகும் இந்தப் பெட்டகத்துக்கு 'சூப்பர்மேன் நினைவுப் படிகம்' (Supeman MemoryCrystal) என்னும் பெயர் நிச்சயம் பொருந்துமல்லவா?

புகழ்பெற்ற சூப்பர்மேன் திரைப்படத்தில் இது போன்றதொரு கண்ணாடி நினைவுப் படிகம் வரும். ஆதலால் இதற்கு 'சூப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்' என்று பெயர் வைத்துள்ளார்கள்.

எத்தனையோ ஆயிரம் வருடங்களாக நாம் கற்றவை, பெற்றவை, உருவாக்கியவை பற்றிய அனைத்துத் தகவல்களும் நிலைத்து நிற்கவும், நமது நாகரிகத்தின் கடைசி ஆதாரத்தைப் பாதுகாக்கவும் இந்தத் தொழில்நுட்பம் நிச்சயம் உதவும்.

-மாதவன் இளங்கோ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us