PUBLISHED ON : ஜூலை 03, 2023

1) விண்வெளியில் நடப்பட்ட முதல் பயிர் உருளைக்கிழங்கு: 1995ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், விண்வெளிப் பயணத்தின்போது, உணவுப் பயிர்களைப் பயிரிடும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார்கள்.
2) ஒரே மரத்தில் காய்க்கும் பலவித பழங்கள்: இந்த மரத்திற்கு, 'ஃப்ரூட் சாலட் மரங்கள்' என்று பெயர். பலமுறை ஒட்டுப் போடுதல் முறையில், இந்த மரங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரே சமயத்தில், ஆறு வகையான பழங்களைத் தரக்கூடியது.
3) குளிர்காலத்தில் கேரட்டுகள் கூடுதல் இனிப்புடன் இருக்கும்: குளிர் அதிகமாகும்போது, கேரட்டினுள் ஐஸ் துகள்கள் உண்டாகி, பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நிகழும் உள்வேதியியல் மாற்றங்களால், இந்தக் கூடுதல் இனிப்பு சேர்கிறது.
4) 'கெட்சப்'கள் ஒரு காலத்தில் மருந்தாகப் பயன்பட்டன: 1800களில் ஒரு மருத்துவர், அஜீரணம், வயிற்றுப்போக்கைக் குணமாக்கவே, முதன்முதலில் கெட்சப்பை உருவாக்கினார்.
5) பண்டைய நாகரிகங்கள் சாக்லெட்டை நாணயமாகப் பயன்படுத்தின: அந்தக் காலத்தில், மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவில், கோக்கோ விதைகள் பணப் பரிவர்த்தனைக்குப் பயன்பட்டிருக்கின்றன.
6) 'மார்கெரிட்டா பீட்சா' ஒரு ராணியின் பெயரில் இருந்து உருவானது: அந்த ராணிக்கு, மேற்படி பிட்சாவின் ருசி மிகவும் பிடிக்குமாம். அதனால், அந்த பீட்சாவுக்கு, ராணியின் பெயரே நிலைத்துவிட்டது.
