PUBLISHED ON : ஜூலை 03, 2023

டெரிடோபைட்டுகள் (Pteridophytes) என்பவை பூவாத் தாவரங்கள்.
உண்மை. தாவர வகைப்பாட்டில் க்ரிப்டோகேமெ (Cryptogamae) என்ற துணைப் பெரும் பிரிவின் கீழ் டெரிடோபைட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை நிலத்தில் முதலில் உருவான தாவரங்கள். இதற்கு முன்பு நீரில் தாவரங்கள் உருவாகி இருந்தன. விதையற்றவை. ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. நிலத்தின் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்ட முதல் தாவரங்கள். இவை அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகின்றன. மார்சீலியா (ஆரக்கீரை) உணவாக உட்கொள்ளப்படுகிறது. அசோல்லா (Azolla) உயிரி உரமாகப் பயன்படுகிறது. உதாரணம்: பெரணி (Fern) வகைத் தாவரங்கள்.
நைட்ரஜன் சுழற்சியில் (Nitrogen cycle) பாக்டீரியங்கள் ஈடுபடுவதில்லை.
தவறு. நைட்ரஜன் தாவரங்களுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து. இருப்பினும் வளிமண்டலத்தில் உள்ள ஏராளமான நைட்ரஜனை தாவரங்கள் அல்லது விலங்குகளால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனவே, சுழற்சி மூலம் நைட்ரஜன் பல வடிவங்களாக மாற்றப்படுகிறது. இது நைட்ரஜன் நிலைநிறுத்துதல், நைட்ரிஃபிகேஷன், ஒருங்கிணைத்தல், அம்மோனிஃபிகேஷன், டிநைட்ரிஃபிகேஷன் போன்ற படிநிலைகளைக் கொண்டது. இப் படிநிலைகளில் நைட்ரோசோமோனாஸ், ரைசோபியம், சூடோமோனாஸ், தியோபாசில்லஸ் உள்ளிட்ட பாக்டீரியங்கள் ஈடுபட்டு நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன.
