தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இனிக்கும் பெயர்கள்

இனிக்கும் பெயர்கள்

இனிக்கும் பெயர்கள்


PUBLISHED ON : ஏப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கப்கேக், ஜெல்லிபீன், டோநட்... 'இனிப்புகளின் பட்டியல்' மாதிரி இருக்கிறதே! சந்தேகமே இல்லை, எல்லாம் இனிப்புகளின் பெயர்கள்தான்; ஆனால் இனிப்புகள் அல்ல. குழப்பம் வேண்டாம், ஆண்ட்ராய்டு (Android) இயங்குதள (ஆபரேட்டிங் சிஸ்டம் - Operating system) பதிப்புகளின் சில பெயர்கள்தான் இவை. ஆண்ட்ராய்டு பற்றிய தகவல்கள் உங்களுக்குப் புதிதல்ல. இருந்தாலும் இப்படிப் பெயர் வைத்த பின்னணியைத் தெரிந்துகொள்ளலாம்...

ஸ்மார்ட் போன்களில் (Smart phones) உள்ள மென்பொருட்களை (Softwares) இயக்குவதற்காக உருவாக்கப்பட்டது ஆண்ட்ராய்டு. இதை ஓபன் ஹேண்ட்செட் அலையன்ஸ் (Open Handset Alliance) நிறுவனம் 2003ல் தொடங்கியது. கூகுள் நிறுவனம் 2005ல் வாங்கியது.

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் பல பதிப்புகள் (versions) வந்துவிட்டன. முதல் இரண்டு பதிப்புகளைத் தவிர, அடுத்து வந்த ஒவ்வொரு பதிப்பிற்கும் புதுமையாக, இனிப்புத் தின்பண்டங்களின் பெயர்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இனிப்பாக இருப்பதுடன், ஆங்கில எழுத்துகளின் அகர வரிசைப்படி (Alphabetical) அமைந்திருப்பதும் இதன் சிறப்பு.

அடுத்து இந்த வரிசையில் வரப்போகும் பதிப்பு 'N' என்னும் எழுத்தில் தொடங்கக்கூடிய இனிப்பு வகை. ஆனால், அந்தப் பண்டத்தின் பெயர் என்னவாக இருக்கும்? நெக்டர் (Nectar), நியோபாலிடன் (Neopolitan), நேச்சோ (Nacho) போன்ற சில பெயர்களும் அடிபடுகின்றன.

அது இந்தியாவில் இருக்கும் தின்பண்டங்களின் பெயராகவும் இருக்கலாம். இதை கூகிள் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்று, 2015ல் இந்தியா வந்திருந்த சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

நுங்கு, நெய்யப்பம் என்று எதையாவது வைப்பார்களோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us