தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஸ்மார்ட் சோலார் ஜன்னல்

ஸ்மார்ட் சோலார் ஜன்னல்

ஸ்மார்ட் சோலார் ஜன்னல்


PUBLISHED ON : ஏப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடைக் காலம் வந்துவிட்டது. நம் ஊரில் கூடவே வருவது மின்வெட்டு! மின்விசிறி ஓடாது. வியர்த்து ஊற்றும். மொட்டை மாடியைத் தேடி ஓடுவோம். இன்வெர்ட்டரை மதிப்போடு பார்ப்போம். இன்வெர்ட்டர் சேமித்துவைத்துக்கொள்ளவும் மின்சாரம் தேவை ஆயிற்றே...

இன்வெர்ட்டருக்கு மாற்றாகத்தான் Solaar Power என்கிற சூரிய மின் ஆற்றல் வந்தது. வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் அமைத்து வீட்டிற்குத் தேவையான சூரிய மின் சக்தியைப் பெற ஆரம்பித்தோம்.

ஏற்கெனவே, சோலார் இன்வர்ட்டர், விளக்கு, ஹீட்டர், போன்ற சூரிய சக்திப் பொருட்கள் உள்ளன. அடுத்தகட்ட வளர்ச்சியாக இப்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்திருக்கிறது. சூரிய மின் ஆற்றலை உருவாக்குகிற ஜன்னல்கள்தான் அவை!

'ஸ்மார்ட் ஜன்னல்கள்' எனப்படும் இவை, ஒளி ஊடுருவும் திறனை சோலார் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் விதமாக உருவாக்கப்படுகின்றன. இந்த ஜன்னல்கள் பகல் நேரங்களில் மின் சக்தியைச் சேமித்து இரவில் பயன்படுத்தலாம். பகல் நேரத்திலேயே வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தி, அறையைக் குளிர்ந்த நிலையில் வைக்கும் வசதியையும் இந்த ஸ்மார்ட் ஜன்னல்கள் தருகின்றன. பெரிய கட்டடங்களில் இந்த ஜன்னல்களைப் பொருத்துவதன் மூலம் மின்சாரத்தின் தேவையை வெகுவாகச் சமாளிக்கலாம். மின்சாரத்தின் தேவை அதிகரித்துவரும் நிலையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு அவசியம்தானே...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us