PUBLISHED ON : ஜூன் 18, 2018

முறைசார் தொழில்களில் (organised sector- - ஆர்கனைஸ்டு செக்டார்), அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிரம் முதலிடம் பிடித்துள்ளது.
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்.) அமைப்பு இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017 செப்டம்பர் முதல் கடந்த மார்ச் வரை, இந்தியாவில், முறைசார் தொழில்களில் 39.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4.65 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இத்துறையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை, தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உருவாக்குகின்றன.
எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாயின. அடுத்த இடங்களில் கட்டுமானத் துறை, வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறைகள் உள்ளன.
