உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 01, 2016
அ நிறம் | அளவு
ஜன. 28 - சீனாவில், தமிழ் வானொலி ஒலிபரப்பு, 1963ல் தொடங்கப்பட்டது. இது சீனா மட்டுமன்றி இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் நேயர்களுக்கும் கேட்கக் கிடைக்கிறது. தமிழ்ப் பிரிவில், 15 சீனர்களும், மூன்று தமிழர்களும் அறிவிப்பாளர்களாக உள்ளனர். சீன தமிழ்ப் பிரிவுக்கு தலைவராகச் செயல்படும் அறிவிப்பாளர் கலைமகள் (இயற்பெயர் ஷாப் சியாங்). அவரும் இன்னொரு அறிவிப்பாளரான வான்மதியும் (ஹோலினா) அகில இந்திய பண்பலை வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக திருநெல்வேலிக்கு வந்தனர். அப்போது, சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்புக்கு, சர்வதேச அளவில், நேயர்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக, அதன் தலைவர் கலைமகள் தெரிவித்தார்.
