தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இணையத்தில் தமிழ்!

இணையத்தில் தமிழ்!

இணையத்தில் தமிழ்!


PUBLISHED ON : செப் 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கழகத்துடன், உத்தமம் அமைப்பு இணைந்து நடத்திய 18வது தமிழ் இணைய மாநாடு, செப்டம்பர் 20இல் தொடங்கி 22 வரை நடைபெற்றது. கணினித் தமிழாய்வு பற்றிய இந்த மாநாடு, 1997ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியிலும் இதுவரை பதினேழு தமிழ் இணைய மாநாடுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 18வது மாநாட்டின் மையக் கருத்தாக 'தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு' (Tamil Robotics and Language Processing) இருந்தது.

தமிழ்க் கணினிப் பயன்பாட்டில், வன், மென்பொருட்களைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை (பார்வைத்திறன், கேட்கும்திறன் பாதிப்பு) அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள், கல்வி கற்றல், சமூகப் பணிகள் போன்றவற்றில் முழுமையாகப் பங்கேற்க உதவுவதே இதன் நோக்கம்.

இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப்பற்றி, பலர் சிறப்புச் சொற்பொழிவுகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைத்தனர். இது தமிழ் மொழியியல் ஆய்வையும், தமிழ்க்கணினி ஆய்வையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.

பேசப்பட்ட தலைப்புகள்

1. Speech to Speech Machine Translation: Challenges and Opportunities Ahead

2. Technologies powered by voice behind the scenes

3. Touch Screen Keyboard made easy for the visually challenged

4. Tamil Text to Speech Application

5. NLP for low resource languages: A multipronged agenda to enable the languages of the next billion people

6. Deep Neural Networks and Graphical Models for Large Vocabulary, Automated Speech Recognition in Tamil

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us