PUBLISHED ON : டிச 31, 2018

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆண்டுதோறும் மாத நாட்காட்டியை வெளியிடுகிறது. இதற்கென ஒவ்வோராண்டும் உலக அளவில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டியை நடத்தும். அதில் தேர்வாகும் படங்களைத் தமது நாட்காட்டியில் வெளியிடும். 2019-ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் பழனியைச் சேர்ந்த, ஒரு மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்துகொண்ட இப்போட்டியில், திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தேன்முகிலன் வரைந்த படம் தேர்வுபெற்று, நாசாவின் காலண்டரில் இடம்பிடித்துள்ளது. அவரது 'விண்வெளியில் உணவு' என்ற தலைப்பில் வரைந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாத காலண்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
நாசா வெளியிட்ட காலண்டரை இணையத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். வேண்டுவோர், இம்முகவரிக்குச் செல்லவும். https://tinyurl.com/pattamnews
