உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : டிச 31, 2018
அ நிறம் | அளவு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, பிளஸ் ௨ வகுப்பு பொதுத்தேர்வுகளின் அட்டவணை அதன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிளஸ் ௨ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 2019 பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும். அதுபோல சி.பி.எஸ்.இ.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி, மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளின் முடிவுகள் 2019 ஜூன் முதல்வாரத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுகள் பற்றிய மேலும் தெளிவான அட்டவணையைப்பெற cbse.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
