தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தமிழ்ப் பேரறிஞர்

தமிழ்ப் பேரறிஞர்

தமிழ்ப் பேரறிஞர்


PUBLISHED ON : அக் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ச.வையாபுரிப் பிள்ளை

12.10.1891 - 17.2.1956

திருநெல்வேலி


இலக்கிய ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, நூல் பதிப்பு, அகராதி தொகுப்பு என்ற நான்கு துறைகளிலும் புகழ் பெற்றவர். பல மூலங்களிலிருந்து சான்றுகள் சேகரித்து ஆராய்ச்சி நூல்கள் வெளியிட்டவர். 'இவரது நூல்களிலே சரித்திர அறிவும் ஆற்றலும் கலை உணர்வும் விமரிசன நோக்கும் பின்னிக் கிடக்கின்றன. பண்டைத் தமிழ் இலக்கியத்தையும் இன்றைய தமிழ் இலக்கியத்தையும் பற்றிச் சலிப்பில்லாமல் படிக்கக்கூடிய நானூறு பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இயற்ற முடியும் என்று சாதித்துக் காண்பித்தவர்' என்று தமிழ் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம், வையாபுரிப் பிள்ளையைப் பாராட்டியுள்ளார்.

பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் பள்ளியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்தார் வையாபுரி. தமிழ்ப் படிப்பில் மாகாணத்திலேயே முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் பிறகு சட்டக் கல்வியும் பயின்று, வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சிறுவயதிலேயே மொழி மீதான ஆர்வம் அவருக்கு இருந்ததால், படிக்கும்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய கட்டுரைகள் எழுதினார். இதன் காரணமாக 1924இல் ஆங்கிலத் தமிழ்ப் பேரகராதி உருவாக்குவதில் துணை ஆசிரியராக சென்னைப் பல்கலைக்கழகம் இவரை நியமித்தது.

திராவிட மொழிகள் திறனாய்க் குழு உட்படப் பல ஆராய்ச்சிக் குழுக்களுக்குத் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்று மொழியியல் ஆராய்ச்சியில் பேரறிஞராகவும் விளங்கினார்.

நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நுாற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் 2,943 புத்தகங்கள் இருந்தன. அவற்றுடன் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்ச், ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளின் குறிப்புகளும் ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. இவரது நூல்கள் தமிழக அரசால் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

அச்சில் வராத பல தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைப் பிழையின்றி அச்சிட்டது மட்டுமன்றி தமிழ் சொற்களஞ்சியத்தையும் உருவாக்கித் தந்த இந்தப் பேரறிஞர் தமிழன்னைக்கு மகுடமாக என்றும் இருப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us