தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : அக் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 8, 1932 - இந்தியா - விமானப் படை நாள்

முப்படைகளுள் ஒன்று. விமானப்படை வீரர்கள் போரில் ஈடுபடுவதோடு, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் ஈடுபடுகின்றனர். அவர்களின் தியாகங்களை நினைவுகூர இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அக்டோபர் 8, 1935 - மில்கா சிங் பிறந்த நாள்

இந்திய தடகள விளையாட்டு வீரர். 'பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்பட்டார். 1958 காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

அக்டோபர் 10, 1906 - ஆர்.கே.நாராயண் பிறந்த நாள்

படைப்புகள் வழியாக இந்திய இலக்கியத்துக்கு உலகப்புகழ் தேடித் தந்தார். தன் நாவல்களில் இந்தியக் கலாசாரம், பழக்க வழக்கங்கள், சமுதாயத்தின் நிலை என அனைத்தையும் பதிவு செய்தார்.

அக்டோபர் 11, 2011 - சர்வதேசப் பெண் குழந்தைகள் நாள்

குழந்தைத் திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சமத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஐ.நா. சபை இந்த நாளை அறிவித்தது.

அக்டோபர் 12, 1911 - நெ.து.சுந்தரவடிவேலு பிறந்த நாள்

பொதுக்கல்வி இயக்குநராக அப்போதைய முதல்வர் காமராஜருடன் இணைந்து கல்வி வளர்ச்சிக்குத் துணை நின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார்.

அக்டோபர் 14, 1970 - உலகத் தர நிர்ணய நாள்

உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்க சர்வதேச தர அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. நுகர்வோருக்குத் தரமான பொருட்கள் வழங்குவதை வலியுறுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us