தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கப்பலுக்கே டார்ச்சா?

கப்பலுக்கே டார்ச்சா?

கப்பலுக்கே டார்ச்சா?


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலங்கரை விளக்கம் (Light House லைட் ஹவுஸ்) சென்று பார்த்தது உண்டா?

கடலில் செல்லும் கப்பல், படகு போன்றவற்றிற்கு கரை இருக்கின்ற இடம், துறைமுகம் உள்ள பகுதி தெரியவேண்டும். துறைமுகம், கரை ஆகிய இடங்களை ஒளி மூலமாக அடையாளம் காட்ட கலங்கரை விளக்கம் உதவுகிறது. ஆபத்தான கடற்பகுதிகள், பவளப்பாறை உள்ள இடங்களையும் கலங்கரை விளக்கத்தின் மூலம் அறியலாம்.

முற்காலத்தில் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் தீயை எரிய வைத்தும், எண்ணெய் விளக்கு மூலமாகவும் வெளிச்சம் உருவாக்கப்பட்டது. பிறகு மின் விளக்குகள் வந்தன. நவீன 'கடலில் வழிகாட்டும் 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் - ஜிபிஎஸ்' (Global Positioning System - GPS) ரேடார் (Radar) போன்ற எலக்ட்ரானிக்ஸ் (Electronics) கருவிகள் வந்த பிறகு கலங்கரை விளக்கங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது.

எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் உள்ள பாரோஸ் தீவில் (Pharos Island) உள்ள கலங்கரை விளக்கம்தான் உலகிலேயே முதன் முதலில் அமைக்கப்பட்டது. இதன் பெயர் அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம். இது கி.மு. 3--ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் மிகப் பிரமாண்டமான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. ஆரம்ப காலத்தில் எண்ணை விளக்குகளை பயன்படுத்தி வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டது. இதன் உயரம் சுமார் 136 மீட்டர் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடல் பயணிகளுக்கு உறுதுணையாய் விளங்கிய அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கத்தின் உச்சிப்பகுதி மட்டும் கி.பி. 796-ல் திடீரென இடிந்து விழுந்தது. உலகின் முதல் கலங்கரை விளக்கம் பற்றி தெரிந்து கொண்டோம். தமிழ்நாட்டில் கலங்கரை விளக்கம் உள்ள பகுதிகள்: சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், கோடியக்கரை, மணப்பாடு (தூத்துக்குடி), கன்னியாகுமரி ஆகியவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us