தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வாவ்வ்... லைக்கன்ஸ்

வாவ்வ்... லைக்கன்ஸ்

வாவ்வ்... லைக்கன்ஸ்


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிராமப்புறங்களில் வீட்டு கூரைகள் மீது அடை அடையாகப் பச்சை படர்ந்து இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் .

இதைப் பாசி என்று நாம் வழக்கமாகச் சொல்வது உண்டு. ஆனால், இது பாசி என்ற ஒற்றை உயிரினம் கிடையாது.

பாசியும் (Alga), பூஞ்சையும் (Fungus) சேர்ந்த ஒரு கூட்டுயிருக்கு ஆங்கிலத்தில் 'லைக்கன்ஸ்' (Lichens) என்று பெயர்.

பாறைகள் மீது மஞ்சள் நிறத்தில் பஞ்சு போன்ற இழைகளைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் ஒரு வகை லைக்கன்தான். பாலைவனம் முதல் உறைபனிப் பிரதேசங்கள் வரை எல்லா பிரதேசங்களிலும், இவை வளரும். பல்வேறு நிறங்களில், பல்வேறு வடிவங்களில் இருக்கும். உலகெங்கிலும் இதுவரை ஏறத்தாழ 15 ஆயிரம் வகையான லைக்கன்ஸ் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன.

மரத்தின் பட்டைகள், கிளைகள், பாறைகள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓடுகள், கட்டடச் சுவர், கூரை என ஏதாவது ஒரு பரப்பில் ஒட்டிக்கொண்டு வளரும்.

கிராமப்புறங்களில் அதிகம் காணப்படும். இவற்றை நகர்ப்புறங்களில் அவ்வளவாகப் பார்க்கமுடியாது. சுத்தமான காற்று இருக்கும் இடங்களில் மட்டுமே இவற்றால் வாழ முடியும். காற்றில் மாசு கலந்திருந்தால் அழிந்துவிடும்.

குறிப்பாக சல்பர் டையாக்ஸைடு (Sulphur dioxide), சல்ஃபியூரிக் அமிலம் (Sulphuric Acid), நைட்ரிக் அமிலம் (Nitric Acid), ப்ளூரைட்கள் (Fluorides), ஓசோன் (Ozone), ஹைட்ரோ கார்பன்கள் (Hydro Carbons), தாமிரம் (Copper), ஈயம் (Lead), துத்தநாகம் (Zinc) போன்ற ரசாயனங்கள் காற்றில் அளவுக்கு அதிகமாக கலந்திருந்தால் லைக்கன்ஸ் அழிந்துவிடும். நகர்ப்புறங்களில் காற்று அதிகம் மாசுபட்டிருப்பதால் இவை வளர்வதில்லை. மேலை நாடுகளில், ஓர் இடத்தில் வளரக்கூடிய லைக்கன்ஸ் வகையைக் கொண்டும், அளவைக் கொண்டும் காற்று மாசுபாட்டின் அளவைக் கணிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us