/வாராவாரம்/பட்டம்/தடை தாண்டி தங்கம் வென்ற தருண்

தடை தாண்டி தங்கம் வென்ற தருண்

தடை தாண்டி தங்கம் வென்ற தருண்

தடை தாண்டி தங்கம் வென்ற தருண்

தடை தாண்டி தங்கம் வென்ற தருண்

PUBLISHED ON : மார் 12, 2018


Google News
Latest Tamil News
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், 22வது ஃபெடரேஷன் தேசிய சீனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயத்தில், தமிழக வீரர் அய்யாச்சாமி தருண், தங்கம் வென்று, தேசிய அளவில் சாதனை படைத்தார்.

இதே அளவு தூரத்தை 49.94 நொடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது, பத்து ஆண்டுகள் கழித்து இதனை தருண், 49.45 நொடிகளில் கடந்து, புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள, கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பையும் தருண் பெற்றுள்ளார்.