தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சோதனை டூ சாதனை

சோதனை டூ சாதனை

சோதனை டூ சாதனை


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில் இருக்கும் இயற்கை வளங்களை, செயற்கைக்கோள் உதவியுடன் கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் ஐ.ஜி.ஐ.எஸ். (Indigenous GIS (IGIS).

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, அது பற்றிய எச்சரிக்கையை முன்கூட்டியே மக்களுக்குச் சொல்வதற்கான தொழில்நுட்பத்தையும் இஸ்ரோ கண்டறிந்துள்ளது. டி.டி.ஹெச். வழியே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பம் (DTH based Disaster Warning Dissemination System).

தாவரங்களின் இலைகளில் ஏற்படும் நிறமாறுபாடுகளைக் கொண்டு, அவற்றிற்கு எவ்வகையான சத்துப்பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன என்பதை அறியும் தொழில்நுட்பம், அக்ரோபோட்டோ மீட்டர் (Agrophotometer).

பலவேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், கையுறைகளை அணிவதில்லை. இதனால் கைகள் பாதிக்கப்படுகின்றன. கைகளில் இருக்கும் கறைகளை, தோலுக்கு எந்தத் தீங்கும் நேராமல் சுத்தம்செய்யும் சிறப்பு வேதிக்கலவை, பெட்க்ளீன் (PEDCLEAN).

பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டும் வகையிலான பசைகள் (adhesives). இவை இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகள் மூலம் ஏற்படும் அரிப்புகளால் பாதிக்கப்படுவதில்லை. வாகனத் தயாரிப்புக் கூடங்களில் இவ்வகைப் பசைகள், பெருமளவில் பயன்படுகின்றன.

செயற்கைப் பற்கள் தயாரிக்கப் பயன்படும் அக்ராமிட் (ACRAMID) என்ற பொருளை உருவாக்கியுள்ளது.

கட்டடங்களில் ஏற்படும் விரிசல்கள், அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சிறிய ரக ஹோலோகிராஃபிக் இயந்திரம் (portable holographic machine).

அதிவெப்பம் தாங்கும் (Heat--resistant) இஸ்ரோசில் (ISROSIL) எனும் துணியை உருவாக்கியுள்ளது. இது 1,650 டிகிரி செல்சியஸில்தான் உருகும். ஆகவே, தொழிற்சாலைகளில் இருக்கும் குழாய்கள், இணைப்பு இருக்கிகள் (gaskets) ஆகியவற்றில் ஏற்படும் வெப்பத்தைத் தாங்கும்படி, இஸ்ரோசில் துணிகள் அவற்றின் மீது பொருத்தப்படுகின்றன.

நிலத்திலோ, கடலிலோ யாரேனும் வழிதவறினால், அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும் வகையிலான கருவி (Search and Rescue Beacon). இக்கருவியை காணாமற்போன நபர் இயக்கினால், அவர் இருக்கும் இடம் குறித்த தகவல்கள் செயற்கைக்கோள் வழியே அருகில் உள்ள மீட்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். குறிப்பாக, நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.

- ஜி.சரண்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us