தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தண்ணி லாரி தெரியும்; தண்ணி இரயில்?

தண்ணி லாரி தெரியும்; தண்ணி இரயில்?

தண்ணி லாரி தெரியும்; தண்ணி இரயில்?


PUBLISHED ON : ஜூலை 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சில இடங்களில் அதிகப்படி நீர் இருக்கும். வேறு சில இடங்களில் நீர் பற்றாக்குறையும் நீருக்கான தேவையும் இருக்கும். எனவே, நீர் இருக்கும் இடத்தில் இருந்து, தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்வது அவசியம் ஆகிறது. தெருக்களில் ஓடும் தண்ணீர் லாரிகள் சுமார் 12,000 லிட்டர் தண்ணீரைக் கொண்டுபோகும். உள்ளூரில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு இப்படிக் கொண்டு செல்வது வசதியாக இருக்கும்.

அதிக நீரும் வேண்டும், மிகுந்த தொலைவுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். இந்த நிலையில் என்ன செய்வது? இரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவது உதவும். இரயிலில் எப்படித் தண்ணீர் கொண்டு வருகிறார்கள்? அதிகாரிகளிடம் விவரம் கேட்டோம்:

அதிகப்படி நீர் இருப்பு இருக்கும் ஏரி, ஆறு போன்ற இடங்களில் இருந்து 'உயரழுத்த பம்ப்' மூலம் எடுக்கப்படும் நீர், கூட்ஸ் வேகன் வண்டியில் ஏற்றப்படும். இதை இரு விதமாகச் செய்யலாம்.

ஒன்று இரயிலில் தொட்டிகள் வைத்து அதில் நிரப்பிக் கொண்டுவரலாம்.

இந்த முறையில் குறைந்த அளவே தண்ணீர் கொண்டு வர முடியும்.

குறைந்த தொலைவுக்கே கொண்டு வர முடியும்.

மற்றொன்று இரயிலில் டேங்கர் மூலம் கொண்டு வருதல்.

இதிலும் நீர்நிலைகளில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர், இரயிலிலுள்ள டேங்கர்களில் நிரப்பப்படும்.

ஒரு வேகன் என்பது சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இப்படி, 50 வேகன்கள் மூலம் ஒரு இரயிலில் தண்ணீர் கொண்டு வந்தால், ஒரு தடவையில் 25 லட்சம் லிட்டர் நீரைக் கொண்டுவர முடியும்.

கொண்டு வரப்படும் நீர், தேவைப்படும் இடங்களில் உள்ள நீர் பகிர்வு மையங்களில் நிரப்பப்படும். பின்னர், அந்த நீர் தேவைப்படும் இடங்களுக்கு கொண்டுசென்று விநியோகம் செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us