sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள்

/

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள்

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள்

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள்


PUBLISHED ON : ஆக 14, 2017

Google News

PUBLISHED ON : ஆக 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரிஸ் (Eris)

விட்டம்: 2,500 கி.மீ.

சூரியனில் இருந்து இருக்கும் தொலைவு: 96.7 வானியல் அலகு (Astronomical Unit - அஸ்ட்ரோனாமிகல் யூனிட்)

கண்டறியப்பட்ட ஆண்டு: 2005

கண்டறிந்தவர்: மைக் பிரவுன் மற்றும் குழு, பலோமார் விண்வெளி ஆய்வு மையம், கலிபோர்னியா.

சூரியக் குடும்பத்தில், சிறியதும் பெரியதுமாக பல குறுங்கோள்கள் (Dwarf Planet - ட்வார்ஃப் பிளானட்) உள்ளன. சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் 'ஏரிஸ்' (Eris). ஆரம்பத்தில் இது, '136199 ஏரிஸ்' எனக் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகு 'ஸீனா' (Xeno) என்ற தற்காலிகப் பெயரால் குறிப்பிடப்பட்டது. பின்னர் மோதல் மற்றும் கலகத்துக்கான கிரேக்கப் பெண் கடவுளின் பெயரான 'ஏரிஸ்' என்ற பெயர், பன்னாட்டு வானியல் ஒன்றியத்தால் (International Astronomical Union - இன்டர்நேஷனல் அஸ்ட்ரோனாமிகல் யூனியன்) சூட்டப்பட்டது.

இது சூரியனின் சுற்று வட்டத்தில் உள்ள ஒன்பதாவது பெரிய பொருள். புளூட்டோ (Pluto) கிரகத்தைவிட 27% அதிக திணிவு (Mass) கொண்டது. நெப்டியூன் (Neptune) சுற்றுப்பாதைக்கு வெளியே வட்டப் பகுதியில் புளூட்டோவைப் போன்றே, அதைவிட பெரிதான 'ஏரிஸ்' கண்டறியப்பட்டபோது, சூரியக் குடும்பத்தின் 'பத்தாவது கோள்' என்று, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (NASA) ஆய்வாளர்களால் சொல்லப்பட்டது. ஆனால், அது குறுங்கோள் என்ற வரையறுக்குள் வருவதால், பத்தாவது கிரகமாக ஏற்கப்படவில்லை. 'ஏரிஸ்' குறுங்கோளில் 'டிஸ்மோனியா' (Dysmonia) என்ற நிலவு உள்ளது.

- ப.கோபாலகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us