உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 16, 2018

அ நிறம் | அளவு
ஈரோடு, சின்னசேமூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் முகமது யாசின். இவன், பள்ளியின் வாசல் அருகே கிடந்த 50,000 ரூபாயை வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்தான். ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் மாணவனைப் பாராட்டினர். மேலும், சிறுவனுடன் சென்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அப்பணத்தை ஒப்படைத்தனர்.
மாணவனின் நேர்மையைப் பாராட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பாராட்டு விழாவும் நடத்தினார். அதே பள்ளியில் படிக்கும் யாசினின் அண்ணனையும் அழைத்து, அண்ணன்- தம்பி இருவருக்கும் புதிய சீருடை, புத்தகப்பை மற்றும் ஷூ மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். இச்சிறுவனுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
