PUBLISHED ON : மார் 25, 2019

சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பகுதிநேரப் புகைப்படக்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகைக்காக, சென்னையில் ஒரு சிறு குளத்தில் ஆடிப் பாடிக் கொண்டிருந்தவர்களைப் படமெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு சிறுவன் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்ததைப் பார்த்தார்.
உடனடியாக தேவையான முதலுதவிகளைச் செய்யத் தொடங்கினார். நினைவு திரும்பிய சிறுவனை, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், நலம்பெற்று அச்சிறுவன் வீடு திரும்பினான்.
'நெஞ்சில் அழுத்தமான மசாஜ் செய்வது, வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றைத் தொடர்ந்து ஊதுவது ஆகிய முதலுதவிப் பயிற்சிகள் சி.பி.ஆர். (Cardio-Pulmonary Resuscitation - CPR) என்றழைக்கப்படும் உயிர் காக்கும் பயிற்சிகள் உதவின' என்றார் ரவிக்குமார்.