sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சாமானியர்களின் உணவு நூடுல்ஸ்!

சாமானியர்களின் உணவு நூடுல்ஸ்!

சாமானியர்களின் உணவு நூடுல்ஸ்!


PUBLISHED ON : ஜன 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் மேல்தட்டு மக்களால் மட்டுமே உண்ணக்கூடியதாக இருந்தது நூடுல்ஸ். இன்று சாமானியர்களாலும் அன்றாடம் உண்ணப்படுகிறது. ஜெர்மானிய வார்த்தையான 'நூடெல்' (Nudel) என்பதில் இருந்து தோன்றியதுதான் 'நூடுல்ஸ்' என்ற வார்த்தை. இதற்கு,'சிறு முடிச்சு' என்று அர்த்தம்.

ஈஸ்ட் சேர்க்கப்படாமல், கோதுமை மாவையும் நீரையும் சேர்த்து உருவாக்கிய கலவையில் இருந்து நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் சுருள் கம்பிபோல இதன் உருவம் இருக்கும். நீரில் போட்டுக் கொதிக்க வைத்தால் சாப்பிடக்கூடிய பொருள் ரெடி.

இரும்புச் சத்துடன் தையமின், சியாஸின், ரிபோஃப்ளேவின் போன்ற உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் நிரம்பியிருக்கும் உணவு நூடுல்ஸ். கொழுப்புச் சத்து குறைவு.

தற்போது சமைக்காமலேயே சாப்பிடக்கூடிய 'உடனடி நூடுல்ஸும்' வந்துவிட்டது. உடனடி நூடுல்ஸ் உணவு, 1958ஆம் ஆண்டில் மொமோஃபுகு ஆன்டோ என்ற ஜப்பானியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பேக்ட், பேசிக், சில்ட், ஃப்ரைட், சூப், இன்ஸ்டன்ட், சைனீஸ், ஜாப்பனீஸ், கொரியன், ஃபிலிப்பினோ என்று நூடுல்ஸ்களில் தான் எத்தனை வகைகள்!

அரிசி மற்றும் இதர தானியங்கள் போன்றவற்றில் இருந்தும் நூடுல்ஸ் வகைகள் உருவாக்கப் படுகின்றன. நம்ம ஊர் இடியாப்பம், சேமியா போன்றவைம்கூட ஒரு வகை நூடுல்ஸ் தான்.

சீனாவில் உற்பத்தியானதுதான் நூடுல்ஸ். ஹான் வம்சம் சீனாவை ஆண்ட காலத்தில் இருந்தே (கி.மு 206 முதல் கி.பி. 220 வரை) நூடுல்ஸ் புழக்கத்தில் இருந்து வருகிறது. 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் நூடுல்ஸ் உண்ணும் வழக்கம் இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். லாஜியா என்ற தொல்பொருள் அகழாய்விடத்தில் மண்பானையில் சமைத்த நூடுல்ஸ் இருந்ததாம்! மில்லட் கிராஸ் என்னும் தானியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது எளிதில் கிடைத்த ஒரே உணவு, உலர்ந்த நூடுல்ஸ்தான். பின்னர் அன்றாட உணவாகவே அது மாறிப்போனது.

சாப்பிடும்போது 'கறக் மொறுக்' என்று ஓசையெழுப்பிக் கொண்டு சாப்பிடுவதை அநாகரிகம் என்றுதானே நினைக்கிறோம்?

ஆனால், ஜப்பானில், சத்தம்போட்டு உறுஞ்சிச் சாப்பிடுவது அந்த உணவை விரும்பி உண்பதைக் குறிக்கும்! ஜப்பானின் யோகோஹாமாவில் கப் நூடுல்ஸுகளுக்காகவே ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கே 4,560 வகையான நூடுல்ஸ்கள் உள்ளன. தயாரிக்கும் செய்முறை விளக்கங்களும் உண்டு.

சீனர்களுக்கு இது வெறும் உணவு மட்டும் அல்ல. நீண்ட ஆயுளுக்கான ஒரு குறியீடு! சீனப் புத்தாண்டு, பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது நூடுல்ஸ் இல்லாமல் இருக்காது. தாய்லாந்தில் 'யென் டா ஃபோ' (yen ta fo) என்ற பிங்க் வண்ண நூடுல்ஸ் பிரபலம். நொதிக்கவைக்கப்பட்ட சோயா பீன் பசையிலிருந்து இந்த நிறம் கிடைக்கிறது. நிறத்துடன் பிரத்யேக சுவையும் கொடுக்கிறது இந்தப் பசை.

'டொம் யும்' (Tom Yum) என்ற சுவையான தாய்லாந்து நாட்டு நூடுல்ஸ்கள் தமிழ்நாட்டில் சில மால்களில்கூட கிடைக்கிறது. சாப்பிட்டுப் பாருங்கள்.

ஐஸுடன் சேர்த்துச் சாப்பிடுவது கொரியர்களின் ஸ்பெஷல். திரவ வடிவில் இருக்கும் சில நூடுல்ஸ்களின் மேல் பரப்பில் வெள்ளரியும் முள்ளங்கியும் மிதக்கும்.

வியட்நாமில் பன்றி இறைச்சி சேர்த்துச் செய்யப்படும் நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடுவோர் அதிகம். சின்னச் சதுரங்களாக, மெரூன் கலரோடு, ஜெல்லி பதத்தில், நூடுல்ஸுக்கிடையில் இதுவும் இருக்கும். நாய்ங் மையுன் (naeng myun) என்று பெயர்.

சில நாடுகளில் அக்டோபர் 6ஆம் தேதியை நூடுல்ஸ் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

விண்வெளி வீரர்கள், தங்களது பயணத்தின்போது எளிதாக உண்ணுவதற்காக உருண்டை வடிவில் நூடுஸ்கள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டன.

பல நாடுகளில், நூடுல்ஸ்களைப் பதப்படுத்தும்போது, முட்டை அல்லது மிருகக் கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கு நூடுல்ஸ் ஒத்துக்கொள்ளாது என்பது மருத்துவக் கண்டுபிடிப்பு. நூடுல்ஸைக் குழந்தைகள் அதிக அளவில் சாப்பிட்டால், அதில் இருக்கும் சோடியம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

- லதானந்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us