PUBLISHED ON : செப் 26, 2016

படைப்புத் திறனை அதிகரிக்கக்கூடிய கைவினைக் கலைகளில், 'பேப்பர் க்வில்லிங்' எனும் 'காகிதச் சுருள் கலை' முக்கியமானது. விதவிதமான
அளவுகளில் காகிதச் சுருள்கள் செய்து, அவற்றைப் பறவைகள், விலங்குகள் எனப் பல்வேறு வடிங்களாக மாற்றலாம். இந்த வாரம், ஆமை வடிவம் செய்து பார்க்கலாம்.
4 மஞ்சள் நிற பட்டைகளையும், ஒரு நீல நிற பட்டையையும், ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டி இறுக்கமான சுருள் ஒன்றை செய்து கொள்ளவும். க்வில்லிங் ஊசி முனையில், சிறிய பிளவு இருக்கும். அதற்குள் காகிதப் பட்டையை நுழைத்து சீராகச் சுற்ற வேண்டும்.
தேவையான பொருட்கள்: 1. க்வில்லிங் பேப்பர் பட்டைகள் 2. க்வில்லிங் ஊசி 3. பெவிக்கால்
படத்தில் காட்டியபடி உட்புறமாக அழுத்தி விடவும். ஆமையின் உடல் பகுதி தயார்.
நீல நிற பட்டைகளில், சிறிய அளவிலான நான்கு இறுக்கமான சுருள்கள் செய்து, உடல் பகுதியுடன் ஒட்டிவிட்டால் கால்கள் தயார்.
சிறிய துண்டு பட்டையை, வால் பகுதியாக ஒட்டி விடவும்.
நீல நிற பட்டை ஒன்றில் சுருள் செய்து, இறுக்காமல் விடவும். இலகுவான சுருளாக விரிந்ததும், முனையை ஒட்டவும். இதை மாங்காய் வடிவில் அழுத்தி, உடல் பகுதியுடன் பொருத்தி விட்டால் ஆமை தயார்.
- ஓவியா டீச்சர்
