தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'நாணயமான' ஃபெடரர்!

'நாணயமான' ஃபெடரர்!

'நாணயமான' ஃபெடரர்!


PUBLISHED ON : டிச 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் 1981 ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்தார் ரோஜர் ஃபெடரர். கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் அசைக்க முடியாத வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையும் இவருக்கே! மேலும் 31 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவரது வெற்றிகளில் 28 ஏடிபி மாஸ்டர்ஸ் 1,000 பட்டங்கள், 24 ஏடிபி மாஸ்டர் 500 பட்டங்கள்.

அமெரிக்க வீரர் ஜிம்மி கானர்ஸுக்கு அடுத்து, 100 முறைக்கு மேல் ஒற்றையர் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

இவரைக் கௌரவிக்க அவரது உருவம் பொறித்த 20 பிராங்க் வெள்ளி நாணயத்தை சுவிஸ் அரசு வெளியிட்டுள்ளது. தலைப்பட்டை அணிந்து பேக்ஹேண்ட் ஷாட் விளையாடுவது போன்ற அவரது உருவம் அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்த நாணய விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 23 முதல் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'முன்னாள் நம்பர் 1 வீரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் அதிக வெற்றிகளைக் குவித்து நாட்டின் தூதுவராகவும் விளங்குகிறார். களத்துக்கு வெளியே பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். எனவே, அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது' என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. 'இந்தக் கௌரவத்தை அளித்த சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி' என ஃபெடரரும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில், வாழும் காலத்திலேயே இத்தகைய சிறப்பு பெற்ற வீரர் இவர் ஒருவர்தான். ஃபெடரர் உருவப்படத்துடன் வேரொரு வடிவில் 50 பிராங்க் தங்க நாணயம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us