
ஜூலை 26, 1856 - ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த நாள்
உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். இசை, இலக்கிய விமர்சகர். 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். நோபல் பரிசையும், ஆஸ்கர் விருதையும் பெற்ற ஒரே படைப்பாளி.
ஜூலை 27, 1876 - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த நாள்
தமிழ்நாட்டின் 20ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். பக்திப் பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தை, இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த பாடல்களை அதிகம் எழுதியுள்ளார். தேசிய கவிஞர், குழந்தைக் கவிஞர் என்று போற்றப்படுகிறார்.
ஜூலை 28, 1948 - உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள்
உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்க, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. சூழலியல் சீர்கேடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 'இயற்கையைப் பாதுகாத்தால் இயற்கை நம்மைப் பாதுகாக்கும்' என்ற முழக்கத்துடன் இந்தநாள் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 29, 2010 - சர்வதேச புலிகள் காப்பக நாள்
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. உலகில் 8 வகையான புலிகள் இருந்தன. தற்போது 5 இனங்கள் மட்டுமே உள்ளன. புலிகளைப் பாதுகாத்தால், நீர் வளத்தைப் பெருக்கலாம். அதன்மூலம், விவசாயத்தை வளப்படுத்தலாம். புலிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 29, 1883 - பெனிட்டோ முசோலினி பிறந்த நாள்
உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. 1922 முதல் 1943 வரை இத்தாலி நாட்டுக்குத் தலைமை வகித்தார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் போரிட்டுத் தோற்றார். பல மொழிகள் கற்றறிந்ததால் பேச்சிலும், எழுத்திலும் வல்லவர்.
ஜூலை 30, 1863 - ஹென்றி ஃபோர்ட் பிறந்த நாள்
அமெரிக்க போக்குவரத்துத் துறையில் கார் உற்பத்தி மூலம் புரட்சியை ஏற்படுத்தியவர். குறைவான உற்பத்திச் செலவால், சாதாரண மக்களுக்கும் கார் சாத்தியமானது. உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான பிறகு, ஃபோர்ட் பெளண்டேஷனை உருவாக்கி பல நற்பணிகளுக்கு உதவினார்.