
ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என, மொத்தம் ஆறு காண்டங்கள் உள்ளன. காண்டம் என்பது நூலின் பெரும் பிரிவை குறிக்கும்.
சுந்தர காண்டம் பிரிவில் வரும், சுந்தர(ன்) என்னும் சொல், அனுமனைக் குறிப்பதாகும். அனுமனுக்கு சுந்தரன் என்றொரு பெயருண்டு. இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால், இராமாயணம் எனப்பட்டது. கம்பர் எழுதியதால், கம்ப இராமாயணம் எனப்பட்டது. இராம + அயணம் என்ற வடமொழிச் சொற்கள் இணைந்து இராமாயணம் என்றாயிற்று. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும், பண்பாட்டினையும் குறிக்கோளினையும், ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.
இலக்கணப்படி, காப்பியம் என்பது தன்னிகரில்லாத தலைவனைக் கொண்டதாக இருக்க வேண்டும். இராமாயணத்தில் ராமன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளார்.