PUBLISHED ON : மார் 06, 2017

இத்தாலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அழியும் நிலையில் இருக்கும் உலன் 100 மொழிகளை சுயமாகவே கற்று சாதனை படைத்துள்ளார். இத்தாலியைச் சேர்ந்த ரிக்கார்டோ பெர்டானி Riccardo Bertani (86 வயது), தொடக்கக் கல்வியை பாதியிலேயே விட்டவர். சுயமுயற்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 'எங்கள் வீட்டில் ஏராளமான ரஷ்ய மொழி புத்தகங்கள் உள்ளன. இதைப் படிப்பதற்காகவே நானே சுயமாக ரஷ்ய மொழி பயின்றேன். மொழி கற்கும் ஆர்வம் எனக்கு அதிகரித்ததால், சைபீரிய மொழி, மங்கோலிய மொழி, எஸ்கிமோ மொழி என்று பலவற்றையும் கற்றேன். தினமும் அதிகாலை 2 மணி முதல் சூரிய உதயம் வரைதான் என்னுடைய கற்றல் பணி இருக்கும். என்னுடைய 16 வயது தொடங்கி, தற்போது வரை 100க்கும் அதிகமான மொழிகளை கற்றுள்ளேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன். ஆனால், எனக்கு ஆங்கிலம் தெரியாது.' என்று தெரிவித்துள்ளார்.

