PUBLISHED ON : மார் 06, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜார்க்கண்ட் மாநிலத்தில், லட்டேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த 800 ஆண்கள், தாங்கள் வாங்கிய வரதட்சணை தொகையை திருப்பிக் கொடுத்துள்ளனர். பொக்காரி கிராமத்தைச் (Pokhari) சேர்ந்த ஹாஜி அலி, கடந்த ஓராண்டாக வரதட்சணையின் பாதிப்புகளை விளக்கி, பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் ஈர்க்கப்பட்ட அக்கிராம இளைஞர்கள், இதற்கு முன்னர் வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்தனர். மொத்தம் 6 கோடி ரூபாய் பெண் குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வரதட்சணையை திருப்பி அளித்தவர்களில் ஒருவரான அன்சாரி கூறுகையில், 'வரதட்சணையை திருப்பிக் கொடுப்பதன் மூலம், என்னுடைய தவறை சரி செய்துள்ளேன்' என கூறினார்.

