PUBLISHED ON : அக் 02, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சௌதி அரேபியாவில் நீண்ட நாட்களாகவே பெண்கள் கார் ஓட்டத் தடை இருந்து வந்தது. லாஜென் அல் ஹாத்லுல் (Loujain al- Hathloul) எனும் பெண்மணி, இத்தடைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தார். 2014-ம் ஆண்டு செளதியிலிருந்து பக்கத்து நாடான ஐக்கிய அமீரகத்திற்கு காரோட்டிச் செல்ல முயன்ற இவரை கைது செய்து 73 நாட்கள் சிறையில் வைத்தது செளதி அரசு. அம்னெஸ்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இவ்விஷயத்தில் செளதி அரசின் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளன. தற்போது லாஜெனின் போராட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. செளதி மன்னர் சல்மான் 2018 ஜூன் முதல், பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறார். 30 நாட்களுக்குள் ஷரியா விதிகளுக்குட்பட்டு லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் அவ்வறிவிப்பு தெரிவித்துள்ளது.

