தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'விடலபாகா'! பெசரட்டின் பெரிய தாத்தா

'விடலபாகா'! பெசரட்டின் பெரிய தாத்தா

'விடலபாகா'! பெசரட்டின் பெரிய தாத்தா


PUBLISHED ON : ஜூலை 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடலபாகா...பழங்கால இந்தியச் சிற்றுண்டி உணவு வகைகளில் மிக முக்கியமானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தச் சிற்றுண்டி வகை, மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, ராஜ்மா, மசூர் பருப்பு, துவரம்பருப்பு ஆகிய ஐந்து பருப்பு வகைகளின் மாவிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.

இந்துப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, கேக் வடிவில் துண்டுகளாக இந்தச் சிற்றுண்டி தயாரிக்கப்படுகிறது. நம்முடைய இந்தியச் சமையலில் மஞ்சளின் பயன்பாட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இதிலிருந்து அறியலாம். பழங்காலத்தில் மண்டகா, பத்திரிகா போன்ற ரொட்டி உணவு வகைகள் புழக்கத்தில் இருந்தன.

இதிலிருந்துதான் விதவிதமான வட இந்திய ரொட்டி வகைகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல ஐந்து வகையான பருப்புகளை வைத்துத் தயாரிக்கப்படும் 'விடலபாகா' என்கிற சிற்றுண்டி, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவின் மிகமுக்கிய சிற்றுண்டியான பெசரட்டின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது.

- காரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us