தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அசத்தலான இந்திய ரொட்டி!

அசத்தலான இந்திய ரொட்டி!

அசத்தலான இந்திய ரொட்டி!


PUBLISHED ON : ஜூலை 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் பரவலாக உண்ணப்படும் ஈஸ்ட், பேக்கிங் சோடா போன்றவை சேர்க்கப்படாத அன்லெவன்டு (Unleavened) ரொட்டி வகைகள் சிலவற்றைப் பார்க்கலாம்:

இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு, ரொட்டி மற்றும் சப்பாத்திதான் தினசரி உணவாக இருக்கிறது. கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தவாவில் அல்லது தோசைக் கல்லில் சுட்டெடுக்கப்படுகிறது.

சற்று தடிமனாகச் செய்யப்படும் ரொட்டிகள், களிமண்ணால் செய்யப்பட்ட ஓவனில் மிக அதிக வெப்பத்தில் சுடப்படுகின்றன. இதற்கு தந்தூரி ரொட்டி என்று பெயர். வணிகரீதியாக பெரும்பாலும் தந்தூரி ரொட்டிகளே இந்தியாவில் தயாராகின்றன.

புல்கா: சப்பாத்தியின் மிக மெல்லிய வடிவம்தான் புல்கா. தேய்த்த சப்பாத்தியை எரியும் தணலில் நேரடியாகக் காட்டி இது தயாரிக்கப்படுகிறது.

பராத்தா: பராத்தா ஒரு பஞ்சாபி உணவு. மாவை ரொட்டி போல தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் தவாவில் எண்ணெய், நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, இந்த ரொட்டி சுட்டெடுக்கப்பட்டால் அதுவே பராத்தா.

இதுதவிர, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளால் செய்யப்பட்ட மசாலாவை ஸ்டஃப் செய்தும் பராத்தாக்கள் தயாராகின்றன.

போளி: இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் போளி, பிரபலமான உணவு. மகாராஷ்டிர மக்கள் சப்பாத்தி போலவே போளியைத் தயாரிக்கிறார்கள். கர்நாடக மக்கள் கடலைப்பருப்பு, வெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பூரணம் தயாரிக்கின்றனர்.

அதை சப்பாத்தியின் நடுவில் ஸ்டஃப் செய்து, போளியாகச் செய்கிறார்கள்.

- சு.கவிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us