உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
சீனாவில், 10 மாகாணங்களில், கடந்த, ஜூன் 18ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ஜியாங்சூ மாகாணத்தில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சில இடங்களில், மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. மழை, வெள்ளத்தில் சிக்கி, 98 பேர் பலியாகினர். எண்ணூறுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தார்கள். சுமார் இரண்டு லட்சம் பேர் உணவு, இருப்பிடம் இழந்து தவிக்கின்றனர்.
