தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கானகம் ஆளும் கம்பீரன்

கானகம் ஆளும் கம்பீரன்

கானகம் ஆளும் கம்பீரன்


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக புலிகள் தினம் ஜூலை 29

* இந்தியாவின் தேசிய விலங்கு புலி

* 'டைக்ரிஸ்' என்ற லத்தீன் சொல்லில் இருந்து 'டைகர்' என்ற வார்த்தை தோன்றிது.

300 கிராம் மூளை அளவு

கண்கள் இருட்டு நேரத்தில் இன்னும் அகலமாக விரிந்திருக்கும்.

எடை 325 கிலோ வரை இருக்கும்

40 மைல் ஒரு மணி நேரத்தில் ஓடும் தொலைவு

2 - 4 ஒரே தடவையில் புலி போடும் குட்டிகளின் எண்ணிக்கை

100+ பெரும்பாலான புலிகளின் உடலில் உள்ள வரிகளின் எண்ணிக்கை

பல்லின் நீளம் 2 அங்குலம்

30 புலிகளுக்கு உள்ள பற்கள்

நகங்கள் மிகவும் வலிமையானவை. கூரிய நகங்களைப் பயன்படுத்தியே வேட்டையாடும்.

3 - 4 அடி வாலின் நீளம்

அழிந்துவிட்ட புலி இனங்கள்:

பாலி புலி

கேஸ்பியன் புலி

ஜாவா புலி

அருகி வரும் புலி இனங்கள்:

வங்கப் புலி

இந்திய சீனப் புலி

சைபீரியன் புலி

சுமத்திராப் புலி

மலயான் புலி

தென் சீனப் புலி

20 வருடங்கள் வாழும் காலம்

இனம்: 'பேந்தெரா டைக்ரிஸ்'(Panthera Tigris)

குடும்பம்: பூனைக் குடும்பம் (Felidae)

வரிசை: ஊனுண்ணி (Cornivora)

வகுப்பு: பாலூட்டி (Mammallia)

மிக நன்றாக நீந்தும். நீளமாக ஆறுகளைக்கூட நீந்திக் கடந்துவிடும். புலிக் கூட்டத்திற்கு 'ஸ்ட்ரீக்' (Streak) என்று பெயர்.

புலிகளின் கால் விரல் ரேகைகள் மனிதர்களைப் போலவே தனித்துவம் வாய்ந்தவை. ஒன்றைப் போன்று மற்றொன்றின் ரேகை இருக்காது.

30 அடி நொடிக்கு முப்பது அடி தூரம் வரை கடக்கும் திறன் உண்டு

40 கிலோ ஒரே நேரத்தில் புலி உண்ணக்கூடிய இறைச்சி அளவு

1,00,000 > 3200

உலகில் 1900ல் சுமார்

1 லட்சம் என்ற அளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது, 3200 என்ற அளவில் சுருங்கிவிட்டது.

புலிகளைக் காப்போம்!

புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தான் பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைக்க முடியும். வனத்தின் இயல்பு நிலையைப் பாதுகாக்க முடியும். இல்லையெனில் மேய்ச்சல் விலங்குகள் அதிகமாகி காடுகளின் வளம் குறையும். காடுகளின் காவலனாக இருக்கும் புலியை வேட்டையாடுவது தொடர்வதால் சூழலுக்குப் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இதைத் தடுத்து, புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக கடந்த நூறு ஆண்டுகளில் முதன் முறையாக உலகில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புலி இனத்தில் பெரியது சைபீரியன் புலி

மிகச் சிறியது பாலி புலி

உலகில் புலிகள் எண்ணிக்கை

இந்தியா - 2,226

ரஷ்யா - 433

இந்தோனேசியா-371

மலேசியா-250

நேபாளம்-198

தாய்லாந்து-189

வங்கதேசம்-106

பூடான்-103

சீனா-7

வியட்நாம் - 5

லாவோஸ் - 2

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை

2011 - 1706

2012 - 1952

2013 - 2226

2010 - 2014 காலகட்டத்தில் இந்தியாவில் கொல்லப்பட்ட புலிகள் 128

70% உலக அளவில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை

கடந்த 60 ஆண்டுகளில் மூன்று புலி வகைகள் மறைந்துவிட்டன. அவற்றில் முக்கியமானது பாலி புலிகள். இந்த வகைப் புலிகள் இந்தோனேசியாவின் பாலித் தீவில் மட்டும் காணப்பட்டதால் இவற்றிற்கு பாலி புலிகள் என்று பெயர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us