தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்த எங்கள் குடும்பம் வறுமையில் வாடியது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கடற்கரையில், ஓட்டைப் படகில் வசித்து வந்தோம்.

எனக்கு புத்தகம் படிக்கப் பிடிக்கும். அம்மா செலவுக்குத் தரும் பணத்தைச் சேர்த்துப் புத்தகங்கள் வாங்குவேன். பத்து வயதிற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தேன். வசதி இல்லாததால், 10ஆவது வயதில் பள்ளியில் சேர்ந்து, 4 ஆண்டுகள் மட்டுமே படித்தேன்.

இருபது வயதில் இங்கிலாந்து சென்று, எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தர் வேலையில் சேர்ந்தேன். அங்கே நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அவை திரும்பி வந்தாலும் எழுதுவதை நிறுத்தவில்லை. அதன்பிறகே, பத்திரிகைகளில் என்னுடைய படைப்புகள் வெளியாகத் தொடங்கின.

நான் சிறுவனாக இருந்தபோது அம்மாவிடம் கற்ற இசை, பின்னாளில் எனக்கு இசை விமர்சகர் என்ற அடையாளம் தந்தது. பின்னர் நாடகங்களுக்கு விமர்சனங்கள் எழுதி, 'விடோயர்ஸ் ஹவுசஸ்' (Widowers' Houses) என்ற என்னுடைய முதல் நாடகத்தை 1892ல் எழுதினேன். Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் எனக்குப் பெரும் புகழ் சேர்த்தன.

நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் என ஏராளமான படைப்புகளை வெளியிட்டேன். படைப்புகள் அனைத்துமே சமூக சிக்கல்களைப் பிரதிபலித்தன. என்னுடைய எழுத்து போலவே நிஜ வாழ்வின் பேச்சிலும் நகைச்சுவை, நையாண்டி அதிகம் கலந்திருந்தது.

படிப்பதையும் எழுதுவதையும் இறுதிவரை நிறுத்தவே இல்லை. ஆங்கில இலக்கிய உலகில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய எனக்கு நாவல் ஆசிரியர், கதாசிரியர், விமர்சகர், கடிதவியலாளர் எனப் பல முகங்கள் உண்டு.

'ஒன்றும் செய்யாமல் பொழுது கழிக்கும் ஒரு வாழ்க்கை வாழ்வதைவிட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது' இது நான் கூறிய பொன்மொழிகளில் ஒன்று. நாடகங்களில் நான் கூறிய கருத்துகளைக் கேட்டு என்னை 'இங்கிலாந்தின் பிளேட்டோ' என்று வர்ணித்தது இலக்கிய சமூகம்.

இலக்கியத்துக்காக, 1925ல் நோபல் பரிசு, 'பிக்மலியன்' என்ற படத்தின் திரைக்கதைக்காக, 1938ல் ஆஸ்கர் விருது ஆகிய இரண்டு முக்கியமான விருதுகளையும் பெற்ற ஒரே படைப்பாளி நான்தான்!

ஜார்ஜ் பெர்னாட் ஷா

பிறப்பு: ஜூலை 26, 1856

மறைவு: நவம்பர் 2, 1950

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us