தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கம்பளிப்பூச்சி... இனி அழகிய பூச்சி!

கம்பளிப்பூச்சி... இனி அழகிய பூச்சி!

கம்பளிப்பூச்சி... இனி அழகிய பூச்சி!


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோட்டத்தில் கம்பளிப்பூச்சி ஊர்வதைப் பார்க்க அருவருப்பாகத் தோன்றும். பொம்மைக் கம்பளிப்பூச்சி செய்து, விளையாடிப் பாருங்கள்! ஒரு வேளை நிஜக் கம்பளிப்பூச்சியைக் கூட அது விரும்ப வைத்துவிடும்.

தேவையான பொருட்கள்

1. வெவ்வேறு நிறங்களில் சிறிய மெல்லிய பிளாஸ்டிக் பந்துகள் -6

2. பைப் கிளீனர் (இது கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)

3. கூக்லி கண்கள்

4. வெள்ளை நிற அக்ரலிக் பெயின்ட்

5. ஊசி, நூல்

6. கத்தரிக்கோல்

7. பசை

பைப் கிளீனர் வயரில் 3 செ.மீ. நீளமுள்ள இரண்டு துண்டுகள் வெட்டிக்கொள்ளவும். அவற்றை வளைத்து கம்பளிப்பூச்சியின் உணர்விகளை செய்துகொள்ளவும்.

ஊசி நூலினால் பந்துகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும். முதல் பந்தில் தொடங்கும்போது ஊக்கு குத்துவது மாதிரி, ஊசியை செருகி வெளியே எடுக்க வேண்டும்.

அடுத்தடுத்த பந்துகளில், ஒரு முனையில் ஊசியை நுழைத்து அதற்கு நேர் எதிர்முனையில் வெளியே எடுக்க வேண்டும்.

கடைசி பந்திலும், முதல் பந்தைப் போலவே ஊசியைச் செருகி, நூலை இறுகக் கட்டிவிட வேண்டும். கம்பளிப்பூச்சியின் உடல் பகுதி தயார்!

முதல் பந்தின் மேற்பகுதியில் இரண்டு துளைகள் போட்டு உணர்விகளை நுழைத்து விட வேண்டும்.

கூக்லி கண்களைப் பசையினால் ஒட்டிவிட்டு, வெள்ளை நிற அக்ரலிக் பெயின்ட்டால் வாய் பகுதியை வரைந்துவிட வேண்டும்.

அழகிய கம்பளிப் பூச்சியார் ஊர்ந்து செல்லத் தயார்.

-ஓவியா டீச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us