தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கர்: ஊர்ல இருக்குற தாத்தாவோட லேண்ட்லைன் நம்பர் சொல்லுடா.

முன்னா: பரவால்லியே தாத்தாமேல இவ்ளோ பாசம் இருக்கா? வெய்ட் பண்ணுடா, மொபைல்ல பார்த்துச் சொல்றேன்.

ச: இதைக்கூட உன்னால ஞாபகம் வச்சுக்க முடியாதா? உனக்கென்ன குறுகிய கால நினைவிழப்பு (Short term memory loss) நோயா?

மு: டாக்டர் மாதிரிப் பேசிப் பயமுறுத்தாத. போன் மெமரி இருக்கும்போது நம்மளோட மெமரிய ஏன் செலவழிக்கணும்?

ச: அப்படின்னா உன்னோட மூளை புதுசாவே இருக்கு. அதான் ரொம்ப ஷார்ப்பா இருக்குற!

மு: இப்போ என்னதான் சொல்ல வர்ற நீ! கொஞ்சம் டைம் கொடு. நம்பரை மனப்பாடம் பண்ணிச் சொல்றேன்.

ச: அது இல்லடா. மொபைல்போன் வந்ததுல இருந்து நாம யோசிக்கிற திறன் குறைஞ்சுடுச்சு. எதுக்கெடுத்தாலும் அதத்தான் தேடுறோம்.

மு: படம் காட்டுறதுல இருந்து பல்லுத் தேய்க்கிற வரைக்கும் 'ஆப்ஸ்' இருக்கு. அதனாலதான் அதையே தேடுறோம்.

ச: நம்ம தாத்தா, பாட்டி காலத்துல இந்த வசதிகள் இல்லாமதான் இருந்தாங்க.

மு: நாம சேட்டிலைட் காலத்துல இருக்கோம். காலத்துக்கு ஏத்தமாதிரி பழக்க வழக்கம் மாறுவதுல என்ன தப்பு இருக்கு.

ச: அதுக்காக இப்படியா? சாப்பிடும்போது, குளிக்கும்போது, படிக்கும்போது, கோவிலுக்குப் போகும்போதுன்னு எங்க போனாலும் போனும் கையுமா இருக்குற.

மு: நாட்டு நடப்போட அப்டேட்ஸ் ரொம்ப முக்கியம் சங்கரு. ஒரு நியூஸும் நம்மளத் தாண்டிப் போகக் கூடாது. ட்ரெண்டிங்ல இருப்போம்.

ச: அரட்டை அடிக்குறதுக்குப் பேரு அப்டேட்ஸா? சின்னச் சின்ன கணக்குப் போடுறதுக்குக்கூட மொபைல் கேக்குற. கொஞ்சமாவது மூளைக்கு வேலை கொடுடா.

மு: என்னோட இன்னொரு கை மொபைல்தான். அது இருந்தா எவ்வளவு நேரம் மிச்சமாகுது தெரியுமா?

ச: மிச்சம் இருக்குற நேரத்திலயும் நீ கேம்தான் ஆடுற. போனுக்கு அடிமையா இல்லாம, தேவைக்கு மட்டும் பயன்படுத்திப் பாரு, இன்னும் நல்லாருக்கும்.

மு: என்னது அடிமையா? நான் யாருக்கும் அடிமையா இருக்கமாட்டேன். இனிமே பாரு, மொபைல்போன் என்னைவிட்டு ரொம்ப தூரமா இருக்கும்.

ச: பாக்கத்தானே போறேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us