PUBLISHED ON : ஜூலை 25, 2016

பப்லு எப்போப் பாத்தாலும் பபுள் கம் (Bubble gum) மென்னுக்கிட்டே இருப்பான். நாக்கால மடிச்சு மெதுவாக் காத்து ஊதி பலூன் மாதிரி அத வெடிக்குறதுதான் அவனோட ஹாபி. ஆனா, அவனுக்குத் தெரியாது, இந்த மாதிரி பபுள் கம் திங்குறது இன்னைக்கு நேத்து பழக்கம் இல்ல! பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால இருந்தே மனுஷனோட பற்களுக்குள்ள இது நசுங்கிக்கிட்டுத்தான் இருக்குது. இதுல சேர்க்கப்படுற பாலிமர் (Polymer) மூலக்கூறுகளின் எண்ணிக்கையை வச்சுதான் ஊதக்கூடிய குமிழின் அளவு இருக்கும்!
* வெங்காயம் நறுக்கும்போது பபுள் கம் சாப்பிட்டால் கண்ணீர் வராதாம்!
* இதை மெல்லுவது முகத்துக்குச் சிறந்த பயிற்சி. வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஒரு முக்கியமான குறிப்பு: அடிக்கடி மெல்லுவதால், வாய் வலி, தசை வலி, வயிறு வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.
