தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன்!

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன்!

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன்!


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் ஆகஸ்ட் 29

“மைக் பிடிச்சு ஆடிட்டா, மைக்கேல் ஜாக்சன் ஆக முடியுமா?” ஆர்வக்கோளாறில் ஆடுபவர்களைப் பார்த்து இப்படிக் கிண்டல் செய்வதுண்டு. பாடல் எழுதுவார். இசையமைப்பார். அதற்கு ஏற்றபடி நடனம் ஆடுவார். இடையிடையே நடிக்கவும் செய்வார். இப்படி, இசைக் கலவையாகிய 'பாப்' நடனத்தைப் படைத்து இதயங்களைக் கரைத்த கலைஞன் ஜாக்சன்!

முன்நெற்றியில் விழும் நூடுல்ஸ் முடியோடு ஜாக்சன் மேடையில் தோன்றும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவார முழக்கம், விண்ணைப் பிளக்கும்! அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் ஜோசப் வால்டர் - கேத்ரின் தம்பதிக்கு ஏழாவது பிள்ளையாகப் பிறந்தார். பென்சில்போல ஒல்லியாக இருந்ததால் பாடுவது, ஆடுவது என வீட்டிலேயே தனது கச்சேரியைத் தொடங்கினார்.

மைக்கின் சகோதரர்களும் இவருடன் சேர்ந்து கும்மாளம் போட, 5 சகோதரர்களுடன் இணைந்து 1969ல் 'தி ஜாக்சன் 5' என்ற இசை நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினர். 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்...சுகம்' என உலகமும் ஜாக்சனைக் கொண்டாட ஆரம்பித்தது. ஜாக்சனும், திரில்லர், பேட், டேஞ்சரஸ், ஹிஸ்டரி என வரிசையாக ஆல்பங்களை வெளியிட்டு ரசிகர்களின் கால்களை இசையால் கட்டிப்போட்டார்.

ரோபோ டான்ஸ், மூன் வாக் என இவருடைய பிரபல ஸ்டெப்புகள் இன்றைக்கும் சுண்டி இழுக்கும். புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக, கால்களை நகர்த்த உதவும் காலணியை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பதிவு செய்து கொண்டார். இதை அணிந்துகொண்டுதான் ரப்பரைப்போல முன்பக்கம் அதிகமாக வளைந்து நடனம் ஆடியதாகச் சொல்வார்கள்.

அல்டிமேட் ஃபேஷன் உலகின் அடையாளமாக இருந்தார். ராணுவத்தினர் அணியும் சீருடைகளில் மாற்றம் செய்து அணிவது, கைகளில் கிளவுஸ், உடைகளில் வைரம் பதிப்பது, ஷார்ட் பேன்ட் இப்படி இவர் அணிந்த உடைகள் அனைத்தும் நாகரிக மாற்றத்தின் ஆரம்பம்.

“செல்வம் முக்கியமில்லை. உன் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம்!” என்று சொன்ன ஜாக்சனை நீள மூக்கு என்றும் குரல் மின்னி மவுஸ்போல இருக்கிறது என்றும் ஏளனம் செய்தார்கள். காயங்களைக் கண்டுகொள்ளாமல் 'ஹீல் தி வேர்ல்ட்' (உலகின் காயங்கள் ஆற்றுவோம்) என்று பாடினார். 'நாம் தான் உலகம்!' என்று எல்லாரையும் அன்பு செய்தார் பாப் இசை உலகச் சக்கரவர்த்தி! அவர் இல்லையென்றாலும் அவரது புகழ் காலம் கடந்து நிலைத்திருக்கும்!

செல்லப் பெயர்கள்

கிங் ஆஃப் பாப்

வேக்கோ ஜாக்கோ

எம்.ஜே.

ஆப்பிள்ஹெட்

மைக்

* ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி. (Extra Terrestrial) படத்திற்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக, 'கிராமி விருது' அவருக்கு கிடைத்தது.

* 'த்ரில்லர்' இசை ஆல்பத்திற்காக, 1982ல் 8 கிராமி விருதுகளை அள்ளினார். இதுதான் இன்றைக்கும் உலகில் அதிகமாக விற்கும் இசை ஆல்பம்.

* ஆல்பம் மூலம் வந்த வருமானத்தை வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us