PUBLISHED ON : செப் 10, 2018

அ நிறம் | அளவு
வட, தென் கொரிய அதிபர்களின் சந்திப்பு, வட கொரிய தலைநகர் பியாங்யாங் (Pyongyang) நகரில் வரும் 18ஆம் தேதி நடக்கிறது. 20ஆம் தேதி வரை நடக்கும் பேச்சுவார்த்தையில், இரு தரப்பு உயர் நிலை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் (Kim Jong Un), தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae- in) ஆகிய இருவரின் இந்தச் சந்திப்பு, கொரிய தீபகற்பத்தைச் சூழ்ந்திருக்கும் அணுஆயுத பீதியைக் குறைப்பதற்கான நடைமுறைகளை ஆராயும் என்று, தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகரான சங் யீயாங்க் தெரிவித்துள்ளார்.
