தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விஞ்ஞானி கொடுத்த ஒளி

விஞ்ஞானி கொடுத்த ஒளி

விஞ்ஞானி கொடுத்த ஒளி


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison), 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ல் ஓஹையோ (Ohio) மாநிலத்தில், மிலன் (Milan) என்னும் இடத்தில் பிறந்தார். பத்தாவது வயதில், தன் வீட்டில் சிறிய தொழிற்கூடம் ஒன்றை அமைத்தார். 'மேதைமை என்பது 1 சதவீதம் உந்துதலும், 99 சதவீதம் வியர்வை சிந்துதலும் (உழைப்பு)” என்றார். “Genius is 1% inspiration and 99% perspiration” என்கிற அவரது சொற்றொடர், பிரபலமானது.

தானியங்கித் தந்தி (ஆட்டோமேடிக் டெலிகிராப் - Automatic Telegraph): இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தை (டியுப்லெக்ஸ் டெலிகிராப் - Duplex Telegraph) 1869ல் சோதனை செய்தார். அதில், இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார்.

கிராமபோன் (Gramophone): எடிசன் கண்டுபிடித்தவற்றில் முக்கியமானது கிராமபோன். இதை, 1877ல் கண்டுபிடித்தார். 'ஒலியை ஒரு தகடு மீது பதிவு செய்தால், அது சுருக்கெழுத்தாக, தனித்த உருவில் அமையும்' என்ற கோட்பாட்டை இதன் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

எலெக்ட்ரிக் பல்ப் (Electric Bulb): அந்தக் காலத்தில் 'மின்சார விளக்கு' கண்டுபிடிப்பது பலரின் கனவாக இருந்தது! அப்போதுதான், 'எடிசன் மின்விளக்கு கம்பெனி' தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் (Francis Upton) என்ற விஞ்ஞானியுடன் இணைந்து 1879ல், உலகின் முதல் மின்விளக்கைக் கண்டுபிடித்தார். (அதற்காக இவரை 'பல்ப்' கொடுத்த விஞ்ஞானின்னு சொல்லிடாதீங்க!)

கைனெட்டாஸ்கோப் (Kinetoscope): 'ஒளியையும், ஒலியையும் இணைத்து, பேசும் படத்தின் மூலம், மாணவர்களுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்' என்றார் எடிசன். முதல் திரைப்பட கருவி கைனெட்டாஸ்கோப்பை (Kinetoscope) 1888ல் கண்டுபிடித்தார்.

இவை மட்டுமல்லாமல், டெலிபிரின்டர் (Teleprinter), பேட்டரி (Battery), சிமென்ட் (Cement), நிலக்கரி, ஒலி நாடா (ஆடியோ டேப் - Audio tape) உள்ளிட்ட ஏராளமான பொருட்களைக் கண்டுபிடித்தார். சுமார் 1093 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, அமெரிக்க அரசிடம் காப்புரிமை பெற்றார். எடிசன், 1913 அக்டோபர் 18ஆம் நாள் மறைந்தார். வெஸ்ட் ஆரஞ்ச் (West Orange) என்னும் இடத்தில் உள்ள, எடிசனின் ஆய்வுக்கூடத்தை, 1956ல் தேசிய நினைவுச் சின்னமாக அமெரிக்க அரசு அறிவித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us