தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/துபாயில் அசத்தும் ரோபோ போலீஸ்

துபாயில் அசத்தும் ரோபோ போலீஸ்

துபாயில் அசத்தும் ரோபோ போலீஸ்


PUBLISHED ON : மே 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் முதன்முதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாண அரசு, காவல் துறையில் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உலவிக் கொண்டிருக்கும் ரோபோ போலீசிடம் சென்று, பொதுமக்கள் புகார் பதிவு செய்ய முடியும். இந்த தகவல்கள் உடனுக்குடன் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவசர உதவி குறித்த தகவல்களையும், பொதுமக்கள் ரோபோவிடம் கேட்டுப் பெறமுடியும்.

'மக்கள் காவல்நிலையங்களுக்கு வந்து போலீசை அணுகுவதை காட்டிலும், ரோபோ போலீஸ் மூலமே, மக்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும்; அபராதம் கட்ட முடியும். வரும் 2030க்குள், துபாய் காவல்துறையில், 25 சதவீத ரோபோ போலீஸ் இருக்கும். ரோபோ போலீஸ்கள் அதிகரிக்கும் அதேசமயம், மனித ஆட்குறைப்பு நிச்சயம் நடைபெறாது' என்று போலீஸ் அதிகாரி ரசூக்கி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us