உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 17, 2018

அ நிறம் | அளவு
பள்ளிப் பாடத் திட்டங்களை பாதியாகக் குறைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அமைச்சகம் சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., ஒருங்கிணைந்த பள்ளி பாடத் திட்டத்தை உருவாக்கும். இதன்படி மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றன.
இவை, மாணவர்களுக்கு அதிகச் சுமை தரக்கூடியதாக உள்ளது என்ற கருத்து பல தரப்பிலிருந்தும் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து, 'என்.சி.இ.ஆர்.டி-.இன் பாடத்திட்டத்தைப் பாதியாகக் குறைக்க, அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாணவ, மாணவியருக்குப் பாடப் புத்தகப் படிப்பு மட்டுமன்றி, திறன் வளர்க்கும் பயிற்சிகளிலும் ஈடுபடுத்துவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக' அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
