தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/போராட்டங்கள் மாற்றுப்பாதையைக் காட்டின!

போராட்டங்கள் மாற்றுப்பாதையைக் காட்டின!

போராட்டங்கள் மாற்றுப்பாதையைக் காட்டின!


PUBLISHED ON : நவ 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தாண்டு இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன. தீபா மாலிக் என்பவருக்கு குண்டு எறிதலில் வெள்ளி பதக்கம் கிடைத்தது. அவரை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சக்கர நாற்காலியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் பல செய்தித்தாள்களில் வெளியாகின.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை தீபா மாலிக். அவருக்கு ஆறு வயதாக இருக்கும்போது முதுகுத்தண்டில் ஒரு கட்டி உண்டானது. அதற்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அறுவை சிகிச்சை முடிந்ததும், இயல்பு நிலை திரும்பவில்லை. பல போராட்டங்கள். பின்னர், மீண்டும் 1999ல் முதுகுத்தண்டில் கட்டி ஏற்பட்டது. மறுபடியும் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் சரியாகிவிடும் என்று நம்பிய தீபாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் அவரால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறினார்கள். எதிர்காலமே வெறிச்சோடிப் போனது போல் ஆனது. ஆனால், மனம் தளராமல் அறுவை சிகிச்சைக்கு முன் 10 நாட்கள், அவர் தம் கால்களால் செய்ய விரும்பியதை எல்லாம் செய்தார். சிகிச்சைக்குப் பின் அவரால் நடக்க முடியாது. சிகிச்சை செய்யவில்லை என்றால் இறந்துவிடுவார். இந்த இரண்டில் எது வேண்டும் என்றபோது அவர் தேர்ந்தெடுத்தது சக்கர நாற்காலியை. தீபாவின் கணவர் ராணுவ அதிகாரியாக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.

இழந்த உறுப்புகளைச் சரி செய்ய 31 அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டார். ஆனாலும் அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. இனி இப்படித்தான் வாழ்க்கை இருக்க போகிறது என்பதைத் துணிவோடு, நேர்மறையான எண்ணத்தோடு எடுத்துக் கொண்டார்.

அவருக்கு பைக் ரேஸ், கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம். அதற்கு முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருடைய கணவர் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அவருடைய கனவுகளுக்கு ஊக்கம் அளித்தார்.

உலகின் மிகவும் ஆபத்தான ரேஸ் என்று அழைக்கப்படும் இமாலய மோட்டர் ரேஸில் ஜம்மு, லே, சிம்லா என 1,800 கிலோ மீட்டர் பயணம் செய்தார். பைக் ரேஸில் பங்கேற்க ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண் மாற்றுத்திறனாளி தீபா. அதேபோல் நீச்சலிலும் இவர் கில்லாடி. யமுனா நதியில் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தி லிம்கா சாதனைப் புத்தகத்தை இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து பல தேசிய, சர்வதேச போட்டிகள். ரியோ ஒலிம்பிக்ஸ் பங்கெடுத்து பதக்கம் பெற்றார். இவருடைய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் 2012ல் இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. வயது முதிர்ந்த நிலையில் அர்ஜூனா விருது பெற்ற இந்தியர் இவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us