PUBLISHED ON : ஜூலை 17, 2017

டிருடி செர்ரஸ் எனும் பெண், அமெரிக்காவின் ஒகோனோமோவோக் எனும் நகரிலுள்ள, தொடக்கப் பள்ளியின் பேருந்து ஓட்டுனராகப் பணி புரிகிறார். இவர், கைகளால் துணி பொம்மை தயாரிப்பதிலும் நிபுணர். எனவே, தனது பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும், பிரத்யேகமாக ஒரு பொம்மை தயாரித்துக் கொடுத்து அசத்துகிறார், இந்த அற்புதமான ஓட்டுனர்.
“பேருந்தில் அவர்தான் எங்கள் குழந்தைகளுக்கு இரண்டாவது அம்மா, அவ்வளவு அன்போடும் அக்கறையோடும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார். குழந்தைகளும் அவரது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனர்” என்று பெற்றோர்கள் நெகிழ்கின்றனர். செர்ரஸ். விதவிதமான மிருகங்கள், ஸ்டார் வார் கதாபத்திரங்களை பொம்மைகளாக்கி குழந்தைகளின் கைகளில் கொடுத்துவிடுவார். இதற்காக அவர் பெறும் விலை என்ன என்று கேட்டபோது, “குழந்தைகளின் முகத்தில் மலரும் புன்னகையே எனக்கான பரிசு.”என்கிறார்.