
அடுத்தவரிடமிருந்து மறைத்து ரகசியம் காப்பதால், நமது மன/உடல் நலன்கள் பாதிக்கப்படுகிறது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க உளவியல் நிறுவனம் (American Psychological Association - APA) நடத்தி வரும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை, இதன் ஆபத்தை விளக்குகிறது.
நம்மூரில் குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. இப்படிச் சொல்லிவிட்டால், ஒவ்வொரு முறை மருந்து குடிக்கும்போதும், கட்டாயம் நாம் குரங்கை நினைப்பதைத் தவிர்க்க முடியாது. அதுபோல, ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து மறைக்க முடிவு செய்யும்போது, அவர்களைப் பார்க்கும் போதெல்லாம், நம்மையறியாமல் அந்த ரகசியத்தை நாம் நினைத்துக் கொண்டே இருப்போம். இதுவே, மன அழுத்தத்திற்குக் காரணமாகி, அது தொடர்ந்து உடல் நல சீர்கேட்டிற்கும் வித்திடுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, பொய்பேசாமல், ஒளிவு மறைவின்றி வாழ்வதே, மன, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.