PUBLISHED ON : ஜன 16, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சக்கர நாற்காலியில் வலம் வரும் ஓர் இளைஞர், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வருகிறார். 2 வயதில் போலியாவால் பாதிக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்தவர் சிவபிரசாத். 28வயது இளைஞரான அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே டென்னிஸ் விளையாடுகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநில டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சிவா, இந்திய அளவில் ஐந்தாவது இடத்திலிருக்கும் அவர் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கிறார். தன்னைப் போன்ற பிற விளையாட்டு வீரர்களின் உதவியோடு திவ்யாங்க் மைத்ரி (Divyaang Myitri Sports Academy -DMSA எனும் விளையாட்டுக்கான பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து பாராலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

