தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வேர்களில் இத்தனை விதங்களா!

வேர்களில் இத்தனை விதங்களா!

வேர்களில் இத்தனை விதங்களா!


PUBLISHED ON : ஜூலை 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவரங்களின் ஆதாரம் வேர்கள். பூமிக்கு அடியில் மட்டுமல்ல; பூமிக்கு மேலேயும், தாவரத்தின் பிற பாகங்களிலும் தோன்றும் வேர் வகைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

வேறிடத்துப் பிறப்பவை (Adventitious - அட்வென்டிடியஸ்)

தண்டு, இலை, கிளை, அடி மரம் ஆகிய பகுதிகளில் தோன்றுபவை.

கரும்பு

முண்டு வேர்கள் (Stilt - ஸ்டில்ட்)

பிரதான தண்டில் இருந்து தோன்றி, தாவரத்தை நிலைநிறுத்த உதவுபவை.

மக்காச்சோளம்

தாங்கு வேர்கள் (Prop - பிராப்)

கிளைகளில் உருவாகி, கீழ்நோக்கி வளரும். நிலத்தில் ஊன்றி கிளைகளைத் தாங்கும்.

ஆலமரம்

மூச்சு வேர்கள் (Respiratory - ரெஸ்பைரேட்டரி)

ஊன்று வேர்களில் இருந்து செங்குத்தாக நீர் மட்டத்திற்கு மேலும், நிலத்திலும் வளர்பவை.

அலையாத்தித் தாவரங்கள்

அண்டை வேர்கள் (Root Buttresses - ரூட் பட்ரெஸ்ஸஸ்)

பெரு மரங்களில், பட்டையாகத் தடித்து சுவர் எழுப்பியது போல உயர்ந்து, சுற்றிலும் வளர்பவை.

மருத மரம் (Buttress Tree)

மிதவை வேர்கள் (Floating - ஃப்ளோட்டிங்)

நீர்த் தாவரங்கள் மிதக்க உதவும். மென்மையாகவும், பருத்தும் காணப்படும். காற்று நிறைந்தவை.

ஆகாயத் தாமரை

உறிஞ்சு வேர்கள் (Haustorial - ஹாஸ்டோரியல்)

தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். கொடிகளுக்குத் தேவையான நீர், உணவு போன்றவற்றை உறிஞ்சும் வேர்கள்.

கஸ்குட்டா (Cuscutta)

ஒட்டு வேர்கள் (Clinging - கிளிங்கிங்)

மரங்களில் தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் பதிந்திருக்கும்.

மிளகுக் கொடி

உறிஞ்சு கவச வேர்கள் (Velamen - வெலாமென்)

செடியின் அடியிலிருந்து உண்டாகி தொங்கிக்கொண்டு, காற்றில் உள்ள ஈரத்தை எடுத்துக்கொள்ளும்.

ஆர்க்கிட் தாவரங்கள்

- அ.லோகமாதேவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us