தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சொல்ல மறந்த பொருட்கள்!

சொல்ல மறந்த பொருட்கள்!

சொல்ல மறந்த பொருட்கள்!


PUBLISHED ON : ஜூன் 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள். இவை எல்லாம் என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?

இவற்றைப் பற்றி உங்கள் பாட்டி சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சட்டென்று பெயர்கள் உங்கள் நினைவுக்கு வரவில்லை என்றால், அப்பா அம்மாவிடம் கேளுங்கள். அதற்கு முன் உங்கள் நினைவுக்குள்ளேயே தேடிப்பாருங்கள்...

உரல்

இதுவும் தானியத்தைப் பொடிக்கப் பயன்படும் கருவிதான். அரிசி, சோளம், போன்ற உலர்ந்த தானியங்களை இதில் போட்டுக் குத்தி உமி நீக்கவோ, பொடிக்கவோ செய்வார்கள். அப்படிக் குத்தப் பயன்படும் தடிக்கு, உலக்கை என்று பெயர்.

ஆட்டுக்கல்

அம்மியில் அரைத்து, சட்னி ரெடியாகிவிட்டது. ஓ.கே. அதை அப்படியே சாப்பிட முடியுமா? இட்லியோ தோசையோ வேண்டுமே... அவற்றிற்கான மாவு அரைப்பதற்கு உண்டானதுதான் ஆட்டுக்கல். இதை ஆட்டுரல் என்றும் சொல்வது உண்டு. ஆடு எங்கே என தேடாதீர்கள். ஆட்டப்படுவதால் இதற்கு இப்படிப் பெயர்.

இதில் குழி போல் இருக்கும் பகுதியில், ஊறவைத்த அரிசி, உளுந்து போன்றவற்றைப் போடுவார்கள். அந்தக் குழியில் கைப்பிடியோடு உள்ள அந்தச் சிறு உருளைக் கல்லை, கைப்பிடியைப் பிடித்து சுழற்றிச் சுழற்றி, ஊறவைத்த தானியம் மாவு ஆகும்வரை அரைப்பார்கள். அந்தச் சிறு உருளைக் கல்லுக்கும் குழந்தை என்றுதான் பெயர்... சாரி... குழவி என்றுதான் பெயர்.

அம்மி

செவ்வகமான ஒரு கருங்கல் அம்மிக்கல். அதன் மேலே சின்னதாக, உருளையாகச் செதுக்கப்பட்ட கல் குழவிக்கல். இதுதான் முன்பு சட்னி அரைக்கப் பயன்பட்ட உபகரணம். செவ்வகமாக இருப்பதன் பெயர் அம்மி, சின்ன உருளையின் பெயர் குழவி. குழந்தை என்பதற்கும் குழவி என்கிற பெயர் உண்டு. இது, அம்மியின் குழந்தை என்பதால் அப்படிப் பெயர் வைத்தார்களோ?

குதிர்

இப்படி, பதார்த்தங்களுக்கு தானியம் தேவைப்படுகிறதே... அந்தத் தானியங்களைச் சேமித்து வைக்கும் பெரிய - அண்டா போன்ற - அமைப்புதான் குதிர். களிமண், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தக் குதிர் உருவாக்கப்படும். அதன் தலைப்பாகம் திறந்திருக்கும். அதன் வழியாக தானியங்களைப் போட்டு மூடிவிடுவார்கள். கீழே துளை ஒன்றைப் போட்டு, வைக்கோலால் ஆன மூடி போன்ற அமைப்பைச் செய்து மூடி வைப்பார்கள். தேவைப்படும்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தானியத்தை எடுத்துக்கொள்வார்கள்.

இடுக்கி

ஆழாக்காலோ உழக்காலோ அளந்து தானியத்தை எடுத்துச் சமைக்கும்போது, சூடான அந்தப் பாத்திரங்களை, துணியை வைத்துப் பிடித்து இறக்குவார்கள். கொஞ்சம் நாகரிகம் வந்ததும் சூடான பாத்திரங்களைப் பிடித்து இறக்க இடுக்கி என்னும் கருவி பயன்பட்டது.

படி

கொஞ்சம் கொஞ்சமாக என்று பொதுவாகச் சொன்னால் எப்படி? குறிப்பிட்ட அளவைச் சொல்ல வேண்டாமா? அப்படி, தானியங்களை அளக்கும் முகத்தல் அளவுக் கருவிகளுள் ஒன்று படி. ஆழாக்கு, உழக்கு, படி, மரக்கால் என்றெல்லாம் அளவைப் பொறுத்து பெயர்கள் மாறுபடும்.

பாக்குவெட்டி

சூடாக, வயிறு முட்டச் சாப்பிட்டது செரிமானம் ஆகவேண்டுமே... அதற்காக அந்தக் காலத்தில் வெற்றிலை பாக்குப் போடும் வழக்கம் இருந்தது. வெற்றிலையோடு போடும் பாக்கு முழு அளவில் இருக்கும். அதில் இருந்து தங்களுக்குத் தேவையான அளவில் வெட்டிக்கொள்வதற்கு பாக்குவெட்டியைப் பயன்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us