தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!


PUBLISHED ON : ஜூன் 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 10, 1925: வே.தில்லைநாயகம் பிறந்த நாள் - தமிழக நூலகத்துறையின் முன்னோடி. தமிழில் 'வேதியம் 1008' உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார். நூலக உணர்வு, வள்ளல்கள் வரலாறு, இந்திய நூலக இயக்கம் ஆகியவை தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல்கள்.

ஜூன் 12, 2002 குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் - உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாகப் பணி செய்து வருகின்றனர். இதை ஒழிக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜூன் 14, 1928 சே குவேரா பிறந்த நாள் - அர்ஜென்டினாவைச் சேர்ந்த சோசலிசப் புரட்சியாளர். கியூபா உட்படப் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி. 'உலகில் நடக்கும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே' என்றார்.

ஜூன் 14, 1969 ஸ்டெஃபி கிராஃப் பிறந்த நாள் - டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்த ஜெர்மன் வீராங்கனை. மொத்தம் 7 விம்பிள்டன் ஒற்றையர், 6 பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர், 5 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, 4 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டி பட்டங்களை வென்றுள்ளார்.

ஜூன் 14, 2004 இரத்த தான நாள் - இரத்தத்தில் உள்ள வகைகளைக் கண்டுபிடித்தவர், கார்ல் லான்ட்ஸ்டைனர். இவரது பிறந்த நாளைச் சிறப்பிக்கவும், இரத்த தானம் செய்வோரை ஊக்குவிக்கவும், உலக சுகாதார நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us