sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இதுதான் எங்க சென்டிமென்ட்!

/

இதுதான் எங்க சென்டிமென்ட்!

இதுதான் எங்க சென்டிமென்ட்!

இதுதான் எங்க சென்டிமென்ட்!


PUBLISHED ON : ஏப் 22, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிர்ஷ்டமான பேனா, தேர்வு எழுதும் இடம், ஃபேன்சியான தேர்வு எண் என சென்டிமென்டாக சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் உண்டுதானே. அப்படி டி-20 விளையாட்டில் கலக்கும் சில வீரர்கள் கடைப்பிடிக்கும் சில சென்டிமென்ட் பழக்கங்கள் இதோ!

தோனி

ராஞ்சி தலைவனான தோனி, சொல்லியடிக்கும் சென்னை அணித்தலைவர். ஹெலிகாப்டர் ஷாட் முதல் நொடியில் ஆட்டக்காரரை வெளியேற்றும் துல்லியமான ஸ்டம்பிங் வரை சாதிப்பவர், எப்போதும் ஏழாம் எண் ஜெர்சியை மட்டுமே அணிவார். இந்திய அணியிலும், டி-20யிலும்கூட ஏழு என்ற எண் மாறவே மாறாது. ஜூலை 7 அன்று பிறந்தவர் என்பது வேறு சென்டிமென்டாகப் பொருந்துகிறது. இப்போது ஏழு என்றால் 'தோனி' என மைதானத்தில் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறது ரசிகர் படை.

விராட் கோஹ்லி

அணி வீரர்கள் சொதப்புகிறார்களா? அணியின் நம்பிக்கை சரசரவென சரிகிறதா? அத்தனை அவநம்பிக்கைகளுக்கும் பூஸ்ட் ஏற்றி, வெற்றி உரம் பாய்ச்சி வெல்வது பெங்களூரு கேப்டனான விராட் கோஹ்லியின் பாணி. அனைத்து ஆட்டங்களிலும் அவர் சென்டிமென்டாக கைகளில் கருப்பு பேண்டு ஒன்றை அணிந்திருப்பார். முதலில் காப்பு ஒன்றை அணிந்திருந்தவர், இப்போது அணிவது கருப்பு பேண்ட் மட்டுமே. 'அசராம ஆக்ரோஷமா அடிச்சே ஜெயிப்பாரு எங்க தல' என்பது ரசிகர்களின் கோரஸ் வாய்ஸ்.

ஷிகார் தவான்

மைதானத்தில் நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் டில்லி அணி வீரர் ஷிகார் தவானின் உற்சாகம், பார்ப்பவர்களுக்குப் பரவசமாய்த் தொற்றும். என்ன காரணம்? மைதானத்தில் ஜாலியாகப் பாடல்களைப் பாடியபடி விளையாடுவதுதான். சத்தியமாக, பாடல்களை ஹம் செய்தபடி விளையாடுவதுதான், டென்ஷனைக் குறைக்கிறது என்கிறார் தவான்.

- ச.அன்பரசு






      Dinamalar
      Follow us